Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இது இனப்படுகொலை இல்லையெனில் எது இனப்படுகொலை ? தமிழருக்கான ஈடு செய் நீதி - சென்னையில் நூல் வெளியீடு 

நாடு கடந்த தமிழீழ அரசு நேற்று சென்னையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மையப்படுத்தி ஒரு ஆவண நூலை வெளியிட்டனர் . இந்த நூல் வெளியீட்டு நிகழ்வை பேராசிரியர் சரசுவதி தலைமை தாங்கி நடத்தினார் . இந்நிகழ்வில் நீதியரசர் சந்துரு, பேராசிரியர் மணிவண்ணன், கனடா தமிழ் சங்கத்தின் தலைவர் ராசாரத்தினம்,  விடுதலை ராசேந்திரன், எழுத்தாளர் ஜெயபிரகாசம் , வழக்குரைஞர் பாண்டிமாதேவி , அஜிதா , ஊடகவியலாளர் தி.எஸ் மணி ஆகியோர் கலந்து கொண்டனர் . 

2009 இல் நடந்த இனப்படுகொலைக்கும் , அதன் பின் தமிழர்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிக்கு பின்பும் தமிழர்களுக்கு எத்தகைய நீதி கிடைக்க வேண்டும் என்பதை குறித்து இந்த நூல் விளக்கியுள்ளது என்று விடுதலை ராசேந்திரன் தெரிவித்தார் . இது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று பொய் கூறி ஒரு இனத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இனவழிப்பே என்பதை இந்நூல் விளக்கியுள்ளது என்று பாண்டிமாதேவி தெரிவித்தார். ஈழத்தில் நடந்த மனிதப் படுகொலை இந்தியாவில் அரசியல் ஆக்கப்படுவதில் தான் நம் வெற்றி அடங்கியுள்ளது என்பதை பேரா . மணிவண்ணன் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் எந்த செல்வாக்கும் இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் ஈழத்தில் இந்தியா செய்த அநீதி தான் என்பதையும் கூறினார். 

கனடா நாட்டில் மூன்று லட்சம் தமிழர்கள் உள்ளனர் . அவர்களின் கோரிக்கையை கனடா நாடு காதுகொடுத்து கேட்கிறது . ஆனால் இந்தியாவில் எட்டு கோடி தமிழர்கள் இருந்தும் இந்தியா தமிழர்களை கண்டு கொள்வதில்லை . தமிழர்களின் கோரிக்கையை உலக வல்லாதிக்க நாடுகள் வழிய வந்து கேட்கும் நிலையை தமிழர்கள் நாம் உருவாக்க வேண்டும் . அமெரிக்கா தமிழர் தரப்பிடம் வந்து தமிழர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க வேண்டும் . அந்த நிலை வரும் வரை நமக்கு நீதி கிடைக்காது என்று பத்தி செய்தார் கனடா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் ராசரத்தினம். 

இறுதியாக பேசிய நீதியரசர் சந்துரு , தமிழகத்தில் இருந்து ஈழத்திற்கு ஆதரவாக 40 எம்பி க்கள்  பாராளுமன்றம் சென்றாலும் இந்தியா நம் கோரிக்கைக்கு செவி சாய்க்காது . மீதமுள்ள 500 எம் பிக்களுக்கு இப்பிரச்சனை குறித்து எந்தவித புரிதலும் இல்லை . அதனால் இந்திய அரசு தமிழர் விரோத கொள்கையை மாற்றிக் கொள்ளாது . மக்கள் இயக்கமாக நாடு தழுவிய அளவில் இப்பிரச்சனையை நாம் எடுத்து செல்வத்தின் மூலமாகவே இந்தியாவை அடிபணிய வைக்க முடியும் என்று கூறினார் . 

இப்புத்தகத்தில் இனப்படுகொலை குறித்த அத்துணை செய்திகளும் ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. இனி என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்தும் விளக்கப் பட்டுள்ளது . 
[vuukle-powerbar-top]

Recent Post