Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ்த் தேசிய உறவுகளுக்கு வணக்கம்,

தமிழ்த் தேசியத்தை முன் வைத்து ஒரு அரசியலை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினோம் . அனைத்து தொகுதிகளிலும் நாம் போட்டியிட வேண்டும் என்று விரும்பினோம் . ஆனால் அதற்கான நேரமோ , வசதியோ இல்லாத காரணத்தால் வெறும்  மூன்று இடங்களில் மட்டுமே வேட்பாளர்களை நிற்க வைத்துள்ளோம் . அதிலும் குறிப்பாக மிக முக்கியமான தொகுதியான திருப்பெரும்பதூரில் தோழர் அதியமான் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் நம் இனத்தின் எதிரிகளான காங்கிரஸ், பாஜக  கட்சியை நாம் தோற்கடிக்கும் அளவிற்காவது நாம் வாக்குகளை பெறவேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட உள்ளோம். நாம் வெற்றி பெறுவோம் என்ற எண்ணத்தில் களம் கண்டாலும் , உண்மையில் தேர்தல் பாதை என்பது எளியவர்களுக்கான பாதை இல்லை என்பதை நாம் அறிய வேண்டும்.

ஒரு பாராளுமன்ற தேர்தலில் நம் குரல் மக்களிடம் சென்று சேரவேண்டும் எனில் குறைந்தது 30 இலட்ச ரூபாய் தேவைப்படுகிறது. பெரிய கட்சிகள் கோடிகளை செலவிடுகிறது . தேர்தலில் வெற்றி பெற்றவுடன் செலவிட்ட கோடிகளை பிறகு வட்டியும் முதலுமாக திரும்பப் பெறுகிறது . ஆனால் நாம் செலவிடுவது இனத்தின் நலனுக்காக . திரும்ப சம்பாதிக்க வேண்டும் என்ற   எண்ணத்தில் அல்ல. இந்த இனத்திற்கு நம்மால் முடிந்த பங்களிப்பை செய்வோம் என்ற எண்ணத்தில் கையில் உள்ள பணத்தை செலவு செய்தும், கடன் வாங்கியும் தேர்தலில் நிற்கிறோம். நாம் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் தமிழ்த் தேசிய சிந்தனையை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவும்.

நமக்கான ஊடகமும் இல்லை, நிதி அளிப்போரும் இல்லை. இந்த நிலையில் தான் எளிவர்களாக நாங்கள் களத்தில் நிற்கிறோம். ஒவ்வொரு முறையும் நமக்கு எதிரான சக்திகளே தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள். இம்முறை  ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறோம் . இந்த முறை நம்மால் சில இலட்சம் வாக்குகளை பெறமுடியும் என்றால், அடுத்த சட்டமன்ற தேர்தலில் நாம் பெருமளவில் வாக்குகளை பெற்றுவிடலாம் . இன்னும் கருத்தியல் ரீதியாக வலிமை அடையலாம். ஏன், சட்டமன்றத்திற்குள் கூட சென்று விடலாம்.  அதற்கு தேவை தமிழினத்தின் பங்களிப்பு மட்டுமே.

தமிழர்களாக உணரும் எவரும் நமக்கு ஆதரவு வழங்கலாம் . நாம் இந்த தேர்தலில் நிற்பது நமக்காக மட்டும் அல்ல, நம் எதிர்கால தலைமுறைக்கும் சேர்த்து தான். அதனால் தமிழர்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் வசதிகேற்ப நிதி உதவி செய்யுங்கள் . நீங்கள் செய்யும் உதவும் ஒவ்வொரு ரூபாயும் , நம் சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும், சிந்திக்க வைக்கும். பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் தேர்தலை உண்மையில் நாம் சந்திக்க இயலாது. இதுவரை தமிழ் சமூகம் நமக்கு கொடுத்த நிதி ஆயிரம் ரூபாய் மட்டும் தான். இதை வைத்துக் கொண்டு நம்மால் எதுவுமே செய்ய இயலாது. சில நூறு பேர்கள் சேர்ந்து ஆளுக்கு சில ஆயிரம் கொடுத்தால் அது லட்சங்கள் ஆகும். அதை வைத்துக்கொண்டு நம்மால் முடிந்த பரப்புரை செய்வோம். திருப் பெரும்பத்தூர் தொகுதியில் இனத்தின் நலனிற்காக களமிறங்கும் தோழர் அதியமானை பலப்படுத்துவோம், வெற்றிபெற செய்வோம் . குறைந்தது ஒரு தாக்கத்தையாவது  ஏற்படுத்துவோம் . இதை நிறைவேற்ற  உங்கள் பங்களிப்பை நாடி நிற்கிறோம்.  ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம். அன்புடன்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு .

பங்களிப்பு செய்ய விரும்புவோர் இந்த இணைப்பில் உள்ள வங்கி , தொடர்பு விவரங்களை பார்க்கவும். நன்றிகள் கோடி !

http://tnatn.org/tn/?page_id=80
[vuukle-powerbar-top]

Recent Post