Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புகையிலைக்கு இருக்கும் கட்டுப்பாடு கோக் பெப்சி போன்ற பானங்களுக்கும் விதிக்கப்பட வேண்டும் !

அண்மையில் தமிழகத்தில் பெப்சி குடித்த ஒரு சிறுமி இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும் இப்போது அது குறித்து யாரும் கவலைப் படுவதாக தெரியவில்லை . நடந்தை மறந்து பலரும் வழக்கம்போல் பெப்சி அருந்தியவாறே உள்ளனர் . பெப்சி கோக் போன்ற பானங்கள் உடல்நலத்திற்கு எந்த அளவிற்கு கேடு விளைவிக்கிறது என்பதை பற்றி அண்மையில் பிபிசி தொலைக்காட்சி  கோக் நிறுவன தலைவரிடம் பெட்டி எடுத்தது . அப்பேட்டியின் போது ஒவ்வொரு அரை லிட்டர் கோக் பானத்தில் சுமார் 40 தேக்கரண்டி சர்க்கரை உள்ளதை ஆதாரத்துடன் கூறிய போது அதை கோக் நிறுவன தலைவர் மறுக்கவில்லை. கோக் நிறுவன தலைவர் ஜேம்ஸ் , கோக் பானத்தில் உள்ள சர்க்கரை அளவை அறிந்து மக்கள் குடிக்க பழகிக் கொள்ளவேண்டும் . எங்கள் நிறுவனம் சார்பாக நாங்கள் ஒன்றும் சொல்வதிற்கு இல்லை . உலகில் உள்ள மற்ற குளிர் பானங்களிலும் இவ்வாறு சர்க்கரை கலந்துள்ளது . அதை பற்றி யாரும்  கவலைப் படவில்லை என்று கூறியுள்ளார் . பிபிசி தொடர்பாளர் , ஒரு திரைப்படம் பார்க்கும் வேளையில் ஒரு மனிதன் 40 தேக்கரண்டி சர்க்கரை உட்கொண்டால் அவன் உடல் எத்தகைய பாதிப்புக்கு உள்ளாகும் . இதனால் உடல் இடை கூடி பல்வேறு நோய்களுக்கு ஆளாகக் கூடும் என்பதை விளக்கியுள்ளார் .

பொதுவாக நவீன நாகரீக மனிதர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் தினமும் தங்கள் உணவில் கோக் பெப்சி போன்ற பானங்களை சேர்த்துக் கொள்கின்றனர் . இதனால் அளவிற்கு அதிகமாக சர்க்கரை அவர்கள் உடலில் சேர்க்கிறது . நாளைடைவில் கணையம் முற்றிலும் பாதிக்கப்பட்டு சர்க்கரை நோய்க்கு ஆளாகுவதுடன் சிறுநீரகம் செயலிழந்து , கண்கள் பார்வை குறைந்து , எடை கூடி , இருதய நோய்க்கும் இடம் அளிக்கிறார்கள் . முதலில் கோக் பருகுவர்களுக்கு இப்படியான பாதிப்புகள் பற்றி தெரியாமல் இருந்தாலும் , நாளடைவில் மேற்கூறிய அனைத்து நோய்களுக்கும் இவர்கள் ஆட்படுவது உறுதியாகவே உள்ளது . குறிப்பாக சிறுவர்கள் அதிக பருமனுடன் வளர்கிறார்கள். வளர வளர பல்வேறு நோய்களுக்கு உள்ளாகிறார்கள் . இதை தடுக்க வேண்டிய கடமை பெற்றோர்களுக்கும் உள்ளது . இத்தகைய பானங்களை தடை செய்வது நடைமுறை சாத்தியம் இல்லாத காரணத்தால் , புகையிலை , மதுவிற்கு இருக்கும் எச்சரிக்கை தகவல்களை இந்த பானங்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோருகின்றனர் சமூக ஆர்வலர்கள். இதை பிபிசி செய்தியாளரும் தன்னுடைய கருத்தாக தெரிவித்து உள்ளார் .

இந்தியா போன்ற நாடுகளில் வெளிநாட்டு மோகம் அதிகம் இருப்பதால் உள்நாட்டு இயற்கை பானங்களான இளநீர் , பதநீர் , மோர் , பழரசம் ஆகியவற்றை மக்கள் அதிகம் பருகாமல் கோக் பெப்சி போன்ற பானங்களையே விரும்பி குடிகின்றனர் . இதனால் மக்களுக்கு பலவகையான நோய்கள் வருகின்றன . இதை தடுக்க வேண்டிய அரசும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது . நாட்டின் வளமான நீர்வளம் இந்த கோக் பெப்சி நிறுவனங்களால் கொள்ளை அடிக்கப்படுகிறது . குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும் காலத்தில் கூட கோக் பெப்சிக்கு பஞ்சமில்லை இந்த நாட்டில் . பொதுமக்கள் தங்கள் உடல்நலம் , இயற்கை நலம் , சுற்றுப்புற சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இப்படியான வெளிநாட்டு கோக் பெப்சி பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும் . தங்கள் குழந்தைகளுக்கும் இதை பற்றி சொல்லிப் புரியவைக்க வேண்டும் . கோக் பெப்சி போன்ற செயற்கை பாங்களை தவிர்ப்போம் . வளமுடம் வாழ்வோம் . கோக் பெப்சி அருந்துவது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்பதை உரக்கச் சொல்வோம் .


[vuukle-powerbar-top]

Recent Post