Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அலை செய்திகளின் புதிய முயற்சியாக  மாணவர்கள் பங்கேற்கும் சிறப்பு விவாதக்களம் !

மாணவர்கள் பங்கேற்ற இந்த விவாதக் களத்தில் தொலைக்காட்சியில் பேச முடியாத பல விடயங்கள் இதில் அலசப்பட்டது . மாணவர்கள் தங்கள் அரசியல் அறிவை தெளிவாக வெளிப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் சிக்கலான கேள்விகளுக்கு மாணவர்கள் மிக நேர்த்தியாக தங்கள் பதிலை முன்வைத்து உள்ளனர் . ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல் ஆய்வாளருக்கு நிகராக மாணவர்கள் தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர் . தமிழக அரசியல் , இந்திய அரசியல் , சர்வதேச அரசியல் என அனைத்து மட்டங்களிலும் மாணவர்கள் தங்கள் பார்வையை அகலப்படுத்தி உள்ளனர் என்பதற்கு இந்த காணொளியே சான்று . இதில் மாணவர்கள் பேசிய தலைப்புகள் வருமாறு

௧. காங்கிரஸ் வீழ்ச்சி மற்றும் அரசியல் மாற்றம்
௨. பாஜக வின் அரசியல் நிலைப்பாடு
௩. ஐ நா வில் இந்திய அரசின் செயல்பாடு
௪. அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு
௫. இந்திய அரசியலில் எத்தகைய மாற்றம் வேண்டும்
௬. தமிழ்த் தேசிய அரசியலின் அடுத்த கட்ட நகர்வு
௭. பாராளுமன்ற தேர்தலில் யாரை தேர்வு செய்ய வேண்டும்
௯. தமிழ்த் தேசியத்தின் பேரம் பேசும் சக்தியை எவ்வாறு பெருக்குவது?
௧௦ . தமிழக அரசியலில் மாணவர்களின் பங்கு .
௧௧. தமிழீழம் மலரும் சாத்தியம் எப்போது ?

இது போன்ற பல தலைப்புகளின் கீழ் மாணவர்கள் அவர்கள் கருத்தை முன்வைத்து உள்ளனர் . அரசியல் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் இந்த காணொளியை பார்க்க வேண்டும் . அரசியல் தலைவர்கள் , கட்சிகளும் இதில் சொல்லப்பட்ட கருத்துக்களை ஆய்வு செய்ய வேண்டும் . இரண்டு பாகங்கள் கொண்ட காணொளியை பாருங்கள் .


[vuukle-powerbar-top]

Recent Post