Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள்.  தமிழர்களின் தலையில் கொள்ளி வைக்கும் இந்திய அரசு . 

மூன்று ஆண்டுகளாக கடுமையாக தங்களை வருத்தியும் பல பொய் வழக்குகளை சந்தித்தும் போராடி வரும் இடிந்தகரை மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது இந்திய நடுவண் அரசு. இருக்கும் அணு உலைகளை மூட வேண்டும் என்று தமிழ் மக்கள் போராடிவரும் நிலையில் இந்திய அரசு 33,000 கோடி ரூபாய் செலவில் புதிதாக இரண்டு அணு உலைகளை நிறுவ ஒப்பந்தம் போட்டுள்ளது தமிழர்களின் தலை மேல் கொள்ளி வைப்பதற்கு சமமாகும். 

இடிந்தகரையில் உள்ள பெண்களும் குழந்தைகளும் தங்கள் மண் பாதுகாக்கப் பட வேண்டும் , நச்சு அணு உலைகள் மூடப்பட வேண்டும் என பல தியாகங்களுக்கு இடையே கடுமையாக போராடி வருகின்றனர். இந்த போராட்டங்களை எல்லாம் கடுகளவும் மதிக்காமல் இந்திய அரசு இப்போது புதிய அணு உலைகளை நிறுவ உள்ளது. தமிழ் மாநிலத்தில் நம் மக்களின் அனுமதி இல்லாமல் எப்படி அணு உலைகளை நிறுவமுடியும் . இந்திய அரசியல் சாசனம் என்ன சொல்கிறது ?  எந்தத் திட்டத்தையும் அந்தப் பகுதி மக்கள் ஏற்க மறுத்தால் அந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றே சொல்கிறது. அது தான் உண்மையான குடியரசின் தன்மை. ஆனால் கூடங்குளத்தில் அப்பகுதி மக்கள் அணு உலைகளை ஏற்க மறுத்தும் மீண்டும் மீண்டும் அணு உலைகளை நிறுவுவது வெந்த புண்ணில் வேலை பாச்சுவதற்கு ஒப்பாகும். 

இதை கண்டித்து தடுத்து நிறுத்த வேண்டிய தமிழக அரசும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது . எல்லா வகையிலும் காங்கிரஸ் அரசை வசைபாடும் ஜெயலலிதா அணு உலை என்று வந்தால் மட்டும் வாயை மூடிக் கொள்வது ஏன் ? அணு உலை ஒப்பந்தந்தின் மூலமாக ஜெயாவிற்கும்  ஒரு கணிசாமான தொகை கிடைப்பது போலத் தோன்றுகிறது . அதனால் அவர் அணு உலை விடயத்தில் நடுவண் அரசுக்கு சாதகமாக செயல்படுகிறார். தமிழகத்தின் வாழ்வாதாரம் நசுக்கப்படும் போது வாய் மூடி மெளனமாக இருக்கும் ஜெயலலிதா எப்படி தமிழ் மக்களை உண்மையாக காப்பாற்றப் போகிறார். 

முன்னாள் திமுக அரசு மீத்தேன் திட்டத்தை தமிழ் மக்களின் தலையில் கட்டியது . இப்போதுள்ள அதிமுக அரசு அணு உலைகளை தமிழர்களின் தலையில் கட்ட சம்மதிக்கிறது . தமிழகத்தில் உள்ள பிற கட்சிகளும் மௌனம் சாதிக்கிறது . தமிழர்கள் நாம் கூடங்குளத்தில் அணு உலைகள் நிறுவுவதை தடுக்க குரல் கொடுப்போம். இடிந்தகரை போராளிகளுக்கு துணை நிற்போம்.  மக்கள் போராட்டம் வெல்லட்டும். மக்கள் விரோத ஆட்சி வீழட்டும் . 


[vuukle-powerbar-top]

Recent Post