Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர் அரசியலில் இது  தொடக்கப் புள்ளி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல் !

முழுவதும் தமிழ்த் தேசிய அரசியலை மையப்படுத்தி உருவாக்கப் பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் திரு அதியமான் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார் . பல தமிழ் அமைப்புகள் , ஆர்வலர்கள் நேரில் வந்து திரு அதியமான் அவர்களை வாழ்த்தினர்.

திருப்பெரும்பதூர் தொகுதியில் போட்டியிடும் அதியமான் தனது வேட்பு மனுவை இன்று மதியம் தாக்கல் செய்தார் . மனுவை தாக்கல் செய்வதற்கு முன் மூன்று தமிழர்களின் உயிரை காக்க தனது இன்னுயிரை நீத்த வீரமங்கை செங்கொடி கொடிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் வீரவணக்கத்தை செலுத்தினர் . தமிழ்த் தேசிய எழுச்சியின் அடையாளமாக விளங்கும் செங்கொடியை இந்த தருணத்தில் நினைவு கூர்வது பொருத்தமானதாக இருக்கும் என்ற வகையில் திரு அதியமான் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் பலரும் செங்கொடிக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர் .

அதன் பின்பு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று முதல் முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தது . இது தமிழர் அரசியலில் ஒரு புதிய தொடக்கமாகும் . தமிழர்களுக்கான அரசியல் கட்டமைப்பை மையப்படுத்தி உருவாக்கப்பட அரசியல் அமைப்பு தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு . தற்காலத்தில் தமிழர்கள் அரசியல் அதிகாரம் இல்லாமல் எல்லா உரிமைகளையும் இழந்து நிற்கும் காலத்தில் பல தியாகங்களை செய்து இப்போது அரசியல் களத்தில் குதிக்கிறோம். இதை நிறைவேற்ற அதியமான் உள்ளிட்ட பலரும் பல வழிகளில் உழைத்துள்ளனர் . நம் உழைப்பு வீணாகாது என்று உறுதியாக நம்புகிறோம் . நாளை மலர இருக்கும் தமிழர் அரசுக்கு இன்றே நாம் அடிக்கல் நாட்டி உள்ளோம் . ஒன்றுபடுவோம் . வென்றெடுப்போம் !

[vuukle-powerbar-top]

Recent Post