Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழினம் எழுச்சிபெற திராவிடத்தை வீழ்த்துவோம் - மே 18 நினைவு நாளில் செல்வா பாண்டியர் பேச்சு !! 

மே 17 சென்னையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நடந்த முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவு நாளில் தமிழின உணர்வாளர்கள் பலரும் கலந்து கொண்டு ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு சுடரேந்தி நினைவஞ்சலி செலுத்தினார்கள் . இந்நிகழ்வில் தமிழர் முன்னேற்ற கழகம் திரு.அதியமான், தமிழர் பண்பாட்டு நடுவம் திரு. இராஜ்குமார் பழனிசாமி, தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் திரு.செல்வா பாண்டியர் மற்றும் பல இன உணர்வாளர்கள்  கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய செல்வா பாண்டியர், முள்ளிவாய்க்கால் தினத்தை நாம் ஒரு துக்க தினமாக மட்டுமே அனுசரிக்காமல் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தை தமிழரை தட்டி எழுப்பும் எழுச்சி தினமாக நாம் மாற்ற வேண்டும் என்று கூறினார். தமிழர் வரலாற்றை குறித்து அவர் பேசும் போது, தமிழர்களின் பெருமைமிக்க அடையாளத்தை, வரலாற்றை  தமிழகத்தை கைப்பற்றிய  திராவிடர்கள் திட்டமிட்டு மறைத்துள்ளனர். தன் வரலாற்றையும் பெருமையையும் அறியாத இனம் தானாகவே வீழ்ச்சியுறும் என்பதில் ஐயமில்லை. தமிழினத்தை திராவிடம் இன்னும் ஒற்றுமையடைய விடவில்லை. தமிழினத்திற்கு என்று எந்த ஒரு பெருமையும் வரலாற்றில் இல்லை என்றும், திராவிடம் தான் தமிழர்களுக்கு அனைத்தையும்  கற்றுக் கொடுத்தது என்றும் ஒரு மாயையை திட்டமிட்டு தமிழர்கள் மேல் திணித்து வந்துள்ளது திராவிடம். தமிழர்கள் தங்கள் சாதி வேற்றுமைகளை களைந்து ஓர்மை பெற இதுவரை திராவிடம் தடையாகவே இருந்து வந்துள்ளது. திராவிடத்தின் பொய்ப்பரப்புரை கருத்துகளை நாம் வீழ்த்தாமல் தமிழர்கள் இன எழுச்சி கொள்ள முடியாது. தமிழர்கள் ஒற்றுமையடைவில்லை எனில் தமிழகத்திலும் ஒரு முள்ளிவாய்க்கால் நடைபெறும். அப்போதும் தமிழர்கள் நாம் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் நிலை வரும். 

ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின் போது தமிழகத் தமிழர்கள் கையறு நிலையில் இருந்தனர். திராவிட ஆட்சியின் கீழ் அடக்கி ஒடுக்கப்பட்டனர். ஆனால் மே 18 இனப்படுகொலை தான் தமிழர்களை தட்டி எழுப்பியது. புதிய இளைஞர்களை அரசியல் நோக்கி பயணிக்க வைத்தது. தாங்கள் இன்னும் திராவிடத்திற்கு அடிமைகள் தான் என உணர வைத்தது. இந்த அடிமைத்தனத்தில் இருந்து வெளியேறி தமிழர் நாட்டை தமிழரே ஆட்சி செய்யும் நிலை வந்தால் தான் தமிழினம் மீள் கட்டமைக்கப்படும். தமிழர் வரலாறு மீண்டெழும் . தமிழர் பண்பாடுகள் காக்கப்படும். இழந்த உரிமைகளை தமிழர்கள் பெறுவார்கள். இவ்வாறு செல்வா பாண்டியர் தனது உரையில் கூறினார் . 

நினைவேந்தல் நிகழ்ச்சியின் இறுதியில் கீழ்க்கண்ட உறுதி மொழியும் எடுக்கப்பட்டது . 

தமிழர் நாட்டை தமிழரே ஆளும் வகை செய்வோம் ! 
தமிழீழம் தமிழர்களின் உரிமைத் தாயகம் ! 
இதை எந்த நிலையிலும் தமிழர்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் !
இழந்த தமிழீழ நாட்டை விரைந்து கைப்பற்றுவோம் !
தமிழகத்தின் உள்ள சிறப்பு முகாம்களை இழுத்து மூடுவோம் !
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ! 
வாழ்க தமிழ் ! 

இன்று உணவு வாங்குவதற்க்காக  ஒரு உணவகத்திற்கு சென்றிருந்தேன். எனக்கு முன்னால் ஒரு இந்திக்கார பையன் உணவு வாங்கிக் கொண்டிருந்தான். அவன் முழுக்க முழுக்க இந்தியில் உரையாடினான். உணவக உரிமையாளரும் அவனுடன் பதிலுக்கு இந்தியில் பேசினார். அவன் எள்ளளவு கொடுக்க வேண்டும் , எவ்வளவு தன்னிடம் உள்ளது என்பதை இந்தியில் கூறினான். தன்னிடம்  இருப்பது இவ்வளவு தான் என்றும் இந்தியில் கூற , அது பரவாயில்லை இருப்பதை கொடுங்கள் என்று இந்தியில் பேசினார் உணவக உரிமையாளரான தமிழர். 

அதற்குப் பின் நான் உணவு வாங்க பணத்தை கொடுத்தேன் . என்னிடம் உரிமையாளர் தமிழில் பேசினார் . அப்போது நான் அவரிடம் , ஏன் நீங்கள் வடநாட்டு இந்திக்காரர்களிடம் அவர்கள் மொழியில் பேசுகிறீர்கள் . நாம் வடநாட்டிற்கு போனால் அவர்கள் தமிழில் பேசுகிறார்களா ? என்று கேட்டேன் . அதற்கு உரிமையாளர் என்ன பதில் சொல்வதென்று முழித்தார் . மீண்டும் நான் வலியுறுத்தினேன் , நம் நாட்டில் நம் மொழியை பேசினால் தான் இந்தியர்கள் நம் மொழியை கற்றுக் கொள்வார்கள் . நாமே அவர்களிடம் இந்தியில் பேசினால் அவர்களுக்கு நாம் இங்கு வந்து நிரந்தரமாக குடியேற வசதி செய்து கொடுக்கிறோம் என்று பொருள் . நாம் இன வேற்றுமை பாராட்டவில்லை . ஆனால் மண்ணின் மொழியை இங்கு வந்து வாழ விரும்புபவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் கூறுகிறோம் . ஆகவே தயவு செய்து உங்களிடம் இந்தியர்கள் வந்தால் நம் மொழியை பேசுங்கள் என்று கூறினேன் . உரிமையாளரும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் சரி என்று தலையாட்டினார். 

தமிழர்களே, ஏற்கனவே ஆங்கிலம் நம் மீது திணிக்கப்பட்டு இன்று எல்லா நிறுவனங்களிலும் ஆங்கிலம் தான் பேசவேண்டும் என்ற  எழுதப்படாத சட்டம் உருவாகி உள்ளது. இப்போது தமிழர்கள் இந்தியில் பேசத் தொடங்கினால் அடுத்து அனைத்து நிறுவனத்திலும் இந்தி தெரிந்தால் தான் வேலை என்ற விதியையும் கொண்டுவார்கள். இதை தடுக்க வேண்டுமெனில் முடிந்தவரை எல்லோரிடமும் தமிழில் பேசுவோம். நம் மண்ணின் மொழியை வேற்றின மக்கள் பேசட்டும், கற்கட்டும்.  மொழி காத்து இனம் காப்போம் .  





[vuukle-powerbar-top]

Recent Post