Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராஜபக்சேவை இந்தியாவிற்குள் அனுமதித்த மோடி அரசை கண்டித்து சென்னையில் தொடர்வண்டி மறியல் ! 30 பேர் கைது .

தமிழனத்தை படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்திய பாஜக அரசு வரவேற்று உள்ளதை கண்டித்து  தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் பெரம்பூர் தொடர்வண்டி நிலையத்தில் லால்பாக் விரைவு வண்டியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிற்பகல் 3.40 மணிக்கு பெரம்பூர் தொடர்வண்டி நிலையத்தை அடைந்த லால்பாக் விரைவு வண்டியை சுமார் 25 தமிழர் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர் . இதை சற்றும் எதிர்பார்க்காத தொடர்வண்டி ஓட்டுனர் , தொடர்வண்டி நிலையத்திற்கு தகவல் அனுப்பினார். காவல்துறை போராட்டக் காலத்திற்கு வருவதற்கு சுமார் அரை மணிநேரம் பிடித்தது . அதுவரை தொடர்வண்டியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர் போராட்டக் குழுவினர். செய்தியை அறிந்த தொடர்வண்டி பயணிகள் அனைவரும் நேரில் வந்து போராட்டத்தை பார்த்தனர் . சில பயணிகள் நம் போராட்டத்திற்கு ஆதரவும் தந்தனர். அரை மணி நேரம் முற்றுகைக்குப் பின் காவல்துறையும் , பயணிகளும் நம்மை தொடர்வண்டிக்கு வழி விடுமாறு கேட்கவே, போராட்டத்தை முடித்துக் கொண்டு கைதாகினர் போராட்டக்காரர்கள். இதனால் சென்னையில் இருந்து வெளி மாநிலங்கள் செல்லும் தொடர்வண்டிகள் சுமார் 40 நிமிடங்கள் தாமதமானது.

பின்குறிப்பு : அதியமானை கைது செய்து  ஒரு பள்ளத்தின் வழியாக காவல்துறை அழைத்துச் செல்லும் போது, அதியமான் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது . மேலும் அவரது இடது கை எழுப்பும் முறிந்தது . தற்போது சிகிச்சைக்காக முகப்பேரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் .

கொடுங்கோலன் ராஜபக்சேவே திரும்பிப் போ என்ற முழக்கமும் , தமிழர் நாட்டை அவமானப்படுத்திய பாஜக அரசை கண்டித்தும் முழக்கங்கள் முன்வைக்கப் பட்டது. போராட்டத்தை முன்னெடுத்த தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் அதியமான் உட்பட 30 பேர்கள் கைது செய்யப்பட்டனர் .   
[vuukle-powerbar-top]

Recent Post