Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழறிவோம்

வெப்பவகைகள் - தமிழில் எத்தனை சொற்கள் !

அழல் (தழல்) - அவியாத கனல்
அனல் (கனல்) - சற்று அவிந்த கனல்
உருமிப்பு - வெப்ப நாளிற் காற்றில்லாமையால் நேரும் புழுக்கம்
எரி - எரியும் சுவாலை
கங்கு - கனல்துண்டு
கணை - மூலச் சூடு
காங்கை - நிலத்தில் அல்லது வெளியிலுள்ள வெப்பம்
கணப்பு - குளிர்காயும் கனல்
காய்ச்சல் - உடம்பு சுடும் வெப்பம்
கொதிப்பு - மேலிருந்து பொங்கும் வெப்பம்
கொள்ளி - எரியுங் கட்டையின் நுனியிலுள்ள நெருப்பு
சுரம் - முதுவேனிற் பாலை
சூடு - உணவினால் உடலில் உண்டாகும் வெப்பம்
புழுக்கம் - காற்றில்லாத அறையில் வேயர்க்கும் வெப்பம்
வெக்கை - எரியும் நெருப்பின் அண்மையிலுள்ள வெப்பம்
வெட்டை - வெப்பமிகையால் உண்டாகும் ஒரு நோய்
வெப்பம் - தட்பம் என்பதற்கு எதிர்
வெப்பு - உடல் வெப்பத்தால் உண்டாகும் தொழுநோய்
வெம்மை - சுடும் வெப்பம்
வெதும்பல் - சுடா வெப்பம்
வெயில் -  வெப்பமான கதிரவன் ஒளி
வேனல் - கோடைகால வெப்ப மென்காற்று
வேனில் - கோடைகாலம்

- தேவநேயப் பாவாணர் 
[vuukle-powerbar-top]

Recent Post