Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சுப்பிரமணியன் சாமி என்ற இந்துத்வா பயங்கரவாதியின் பிடியில் இப்போது இந்திய அரசு !! 

காங்கிரஸ் என்னும் கொலைகார கொடுங்கோல் அரசை மக்கள் தூக்கி எறிந்துவிட்டனர் . ஆனால் இந்த நாடு அதைவிடக் கொடுமையான அரசின் கீழ் வந்துள்ளது என்பதை நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும் . இங்கு இணைக்கப்பட்டுள்ள படங்களை பாருங்கள் . இவை அனைத்தும் சுப்ரமணியன் சாமி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டவை. இப்படங்கள் மக்களுக்கு எந்த வகையான செய்திகளை எடுத்துச் செல்கின்றன என்பதை நாம் பார்க்க வேண்டும். 

இந்தி , இந்து, இந்தியா என்ற  ஒற்றை அடையாளத்தை நோக்கியே இந்த கருத்தியல் பயணிக்கிறது . இக்கருத்தை ஏற்காத அனைவரும் தேசத் துரோகிகள் என்றும் , சமூக விரோதிகள் என்றும் சித்தரிக்கிறார் சு.சாமி. இந்தியாவில் வாழும் அனைவரும் ஒரே அடையாளத்துடன் வாழ வேண்டும் என்றும் அதுவே இவருடைய லட்சியம் என்று கூறிகிறார் சு.சாமி. 

பல தேசிய இனங்கள், பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் நாட்டில் , அனைவருக்கும் சம உரிமைகள் கொடுத்து வாழ்வது தான் ஒரு குடியரசு நாட்டின் கடமையாக இருத்தல் வேண்டும் . அதை விடுத்து எல்லா மொழிகளும் சமஸ்ரித்த மொழியில் இருந்து தான் வந்தது என்றும் , எல்லா மதங்களும் இந்து வேத மதத்தில் இருந்து தான் பிறந்தது என்றும் ஒரு மாயையை மக்களிடம் கட்டவிழ்த்து விட்டு அனைவரும் சமஸ்க்ரித்த மொழியையும் இந்து என்ற அடையாளத்தை ஏற்க வேண்டும் என வற்புறுத்துகிறார் சு.சாமி. 

இந்தியாவில் உள்ள தேசிய இனங்களுக்கு மட்டும் இவர் எதிராக இல்லை . இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் சு சாமி எதிரியாகவே செயல்பட்டு வந்துள்ளார் . ராஜபக்சேவிற்கு ஆதரவாக செயல்பட்டு பௌத்த மத அடையாளத்தை தமிழர்கள் ஏற்கவேண்டும் என்றும் , தமிழீழம் என்று ஒரு நாடு அமையக்கூடாது என்றும் , விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றும் மக்களிடைய பரப்புரை செய்து வருகிறார். 

இப்படி தமிழினத்திற்கும், பிற தேசிய இனங்களுக்கும் எதிரியாக விளங்கும் இந்துத்வா பயங்கரவாதியான சு.சாமி பாஜகவில் முக்கிய உறுப்பினராக இருக்கிறார். மோடி அரசின் செயல்திட்டங்களை இவரே தீர்மானிக்கவும் செய்வார் எனத் தெரிகிறது . மோடி ஏதாவது மக்களுக்கு நன்மை செய்தாலும் சு.சாமி அப்படி செய்ய விடாமல் தடுப்பது நிச்சயம். முதலில் சு.சாமியை பா.ஜ.க. வில் இருந்து வெளியேற்றி அவரை ஒரு செல்லாக்காசாக மக்கள் மாற்ற வேண்டும். இல்லையெனில் சொந்த நாட்டில் மக்கள் சுப்ரமணிய சாமியின் இந்துத்வா பயங்கரவாதத்திற்கு பலியாவதை யாரும் தடுக்க முடியாது. இந்த செய்தி தான் சு.சாமியின் இணைய பரப்புரை நமக்கு பகிரங்கமாக விளக்குகிறது . 



[vuukle-powerbar-top]

Recent Post