Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இன்று என் வீட்டின் அருகில் உள்ள பூங்காவில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தேன். சுமார் பத்து சுற்றுகள் சுற்றுவது வழக்கம் . சுற்றும் போது பலதரப்பட்ட மனிதர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதிகமாக மாணவர்களை பார்க்க அங்கு பார்க்க முடிகிறது. 15 - 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் ஆங்காங்கு கூட்டமாக அமர்ந்து தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பதை கவனிக்க முடிந்தது. என்ன  பேசுகிறார்கள் என்பதை விட எப்படி  பேசுகிறார்கள் என்பதை அறிய ஆவலுடன் அவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்டேன். பொதுவாக எப்படியான தமிழை இளம் தலைமுறை கையாளுகின்றனர் என்பதில் நான் கூடுதல் கவனம் செலுத்துவதுண்டு. 

நான் இன்று பார்த்தவரையில் இந்த மாணவர்கள் பலரும் ஒவ்வொரு வாசகத்தின் இடையில் 'ஓத்தா ' என்னும் சொல்லை பயன்படுத்துவதை கவனித்தேன் . ஒரு நிமிடத்தில் பல முறை அதை பயன்படுத்துகின்றனர். இதை பற்றி அந்த இளவட்டங்களிடையே பேச வேண்டும் என்று எண்ணி அங்கு கூட்டமாக அமர்ந்திருந்த மாணவர்களின் நடுவே நின்றேன் . "தம்பிகளா"  என்று அவர்கள் நடுவே நின்றதும் அவர்களுக்கு ஒரு திகைப்பு. நான் உங்களிடம் ஒரு நிமிடம் பேசலாமா என்று கேட்டேன். அவர்களும் பேசலாம் சொல்லுங்கள் என்றனர் . தம்பிகளே , நீங்கள் அனைவரும் பேசும்போது இடையிடையே ஓத்தா, ஓத்தா  என்று சொல்வதை நான் கவனித்தேன் , அதற்கு என்ன பொருள் என்று வினவினேன்.  நான் இதைக் கேட்டது தான் தாமதம், பையன்கள் அனைவரும் இன்னும் ஆங்காங்கே உள்ள பல பையன்களை கூவி அழைத்தனர் . சுமார் 15 பையன்கள் என்னைக் சுற்றிக் கொண்டனர். அவர்களில் ஒருவன் அண்ணன் எதோ விளக்கம் கேட்கிறார் சொல்லுங்கப்பா என்று கூறினான் . நான் மீண்டும் கேட்டேன் யாருக்காவது விளக்கம் தெரியுமா என்று . அனைவரும் மௌனமாக இருந்தனர் . சிலர் தெரியாது அண்ணா என்றனர் . ஆத்தா என்றால் நம் அம்மாவைக் குறிக்கும் ஓத்தா என்றால் எந்தப் பொருளையும் குறிப்பதாக தெரியவில்லை . ஒரு கெட்ட வார்த்தை என்பது மட்டும் நம் எல்லோருக்கும் தெரியும் . இப்படியான வார்த்தைகளை யார் உங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள் என்று கேட்டேன் . அவர்களும் பசங்க பேசறாங்க அண்ணா அவர்களைப் பார்த்து நாங்களும் பேசுகிறோம் என்றனர் . சரி இப்படித் தான் உங்கள் வீட்டிலும் , உங்கள் தம்பி தங்கைகளிடம் , ஆசிரியர்களிடம் பேசுவீர்களா என்று கேட்டேன் . அவர்கள் அப்படி நாங்கள் பேசமாட்டோம் என்றனர் . நான் சொன்னேன் , தம்பிகளே , உங்களை நம்பி ஒரு சமூகம் உள்ளது. நல்ல சொற்கள் தமிழில் எவ்வளவோ உள்ளன . அதை பயன்படுத்துங்கள் . நல்ல செய்திகளை பற்றி பேசுங்கள் . அதை விடுத்து இப்படி தீய சொற்கள் என தெரிந்தும் அவற்றை பேசாதீர்கள் . உங்களுடைய நண்பர்களுக்கு நீங்களே வழிகாட்டுங்கள் என்றேன் . ஒரு திருக்குறளும் அவர்களுக்கு எடுத்துக் கூறினேன் .' இனிய உளவாக இன்னாத கூறல் " என்னும் குறளுக்கு பொருளும் கூறி , தம்பிகளே இனி இப்படியான சொற்களை நீங்கள் பேசுவீர்களா என்று கேட்க அனைவரும் ஒரே குரலில் பேசமாட்டோம் பேசமாட்டோம் என்று கூறியதும் என் மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சி . மேலும் அவர்கள் என்னிடம் கூறியது , அண்ணா எங்களுக்கு இப்படி அறிவுரை யாரும் சொன்னதே இல்லை அண்ணா என்றனர் . நிச்சயம் நீங்கள் சொன்னதை கடைபிடிப்போம் என்று பையன் கூறியதும் அவர்களிடம் இருந்து விடைபெற்றேன் . 

தமிழ்ச் சொந்தங்களே , நம் வீட்டிலும் இப்படியான மாணவர்கள், இளவட்டங்கள் இருக்கலாம் . அவர்களிடமும் இந்த கருத்தை நாம் வலியுறுத்த வேண்டும் . நல்ல தமிழை நம் பிள்ளைகள் பேச நாம் ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக ஆண் பிள்ளைகள் எளிதில் தீய சொற்களை கற்றுவிடுகிறார்கள் . பெண் பிள்ளைகள் அப்படியான சொற்களை பயன்படுத்துவது இல்லை. அவர்களுக்கு இருக்கும் அந்த நல்லொழுக்கம்  ஏன் ஆம் பிள்ளைகளுக்கு வருவதில்லை? நாம் சொல்லி வளர்ப்போம். நல்ல சொற்களையே நாம் பேச்சில் பயன்படுத்த வேண்டும் . தீய சொற்கள் , வான் சொற்கள் , கடும் சொற்கள் இவற்றை எல்லாவகையிலும் தவிர்க்க வேண்டும் . கோபம் வந்தால் கூட !! 
[vuukle-powerbar-top]

Recent Post