Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மோடி உட்பட தாய் மொழியில் பதவி ஏற்காத இந்திய அமைச்சர்கள் !!

நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவை உலகமே உற்று நோக்கியது . சார்சக் நாட்டு தலைவர்கள் பலரும் இந்த விழாவிற்கு வந்திருந்தனர். இந்த பதவி ஏற்பு விழாவில் பதவி ஏற்றுக் கொண்ட பல அமைச்சர்கள் தங்கள் தாய் மொழியில் பதவி ஏற்கவில்லை என்பது தான் நாம் கவனிக்க வேண்டியது.  45 அமைச்சர்கள் பதவி ஏற்றத்தில் 36 அமைச்சர்கள் இந்தியில் பதவி ஏற்றனர் . மீதம் உள்ள 9 அமைச்சர்கள் ஆங்கிலத்தில் பதவி ஏற்றனர்.

இதில் என்ன கொடுமை என்றால் நாட்டின் பிரதமரான மோடி கூட தனது தாய் மொழியில் பதவி ஏற்கவில்லை என்பது தான் . இந்தி மொழி மிக அண்மையில் பல மொழிகளை அழித்து உருவான மொழி. உண்மையில் இந்தி என்பது யாருக்கும் தாய் மொழி அல்ல. அது வட மாநிலங்களில் பேசப்பட்ட பல மொழிகளை ஒன்றிணைத்து உள்ளடக்கி உருவான பொது மொழி தான் . நான்கு மாநிலங்களின் மொழியாக இந்தி கருதப்படுகிறது . இந்த மாநிலங்களில் இருந்த பூர்வீக மொழிகள் அழிக்கப்பட்டு இந்தி மொழியை உருவாக்கினார்கள் . அதனால் உண்மையில் இந்தி இந்தியர்கள் எவரின்  தாய் மொழியும் அல்ல. இந்த நிலையில் இந்திய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவில் இந்தியில் பல அமைச்சர்கள் பதவி ஏற்று உள்ளது, உலகிற்கு ஓர் தவறான செய்தியை கொடுத்துள்ளது.

அவரவர் தாய் மொழியில் பதவி ஏற்பதின் மூலமாக நம் மொழி உரிமையை நாம் நிலைநாட்டலாம் . வெளிநாட்டில் இருந்து வந்திருந்த அரசியல் தலைவர்கள் என்ன நினைத்திருப்பார்கள். இந்தியாவில் பேசப்படும் மொழிகள் இந்தி மற்றும் ஆங்கிலம் தான் என்று நினைத்திருப்பர்கள். தமிழகத்தை சேர்ந்த பொன். ராத கிருஷ்ணன் , நிர்மலா சீதாராமன் , ஆந்திராவை சேர்ந்த வெங்கையா நாயுடு, மற்றும் சீக்கிய இனத்தை சேர்ந்த மேனகா காந்தி  போன்றவர்கள் கூட தங்கள் தாய் மொழியில் பதவி ஏற்காமல் ஆங்கிலத்தில் பதவி ஏற்றனர். இது இவர்கள் தாய்மொழிக்கு செய்யும் துரோகம் அல்லவா ? இந்தியை தாய் மொழியாகக் ஏற்றுக் கொண்டவர் இந்தியில் பதவி ஏற்கிறார்கள். மற்றவர்கள் ஏன் இந்தியில் பதவி ஏற்க வேண்டும். மோடி ஏன் இந்தியில் ஏற்கவேண்டும் ? அவரது தாய் மொழியான குஜராத்தியில் ஏற்கலாமே.

அது போல் ஒவ்வொரு தேசிய இனத்தை சேர்ந்தவர்களும் அவர்கள் தாய் மொழியில் உறுதி ஏற்றால் தானே இந்தியா என்பது உண்மையில் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்று கூறலாம். இந்த பதவி ஏற்பு நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்த ராஜபக்சே கூட உள்ளுக்குள் சிரித்திருப்பான். மொழிப்பற்றில், மொழி உரிமையில் தன்னுடைய நாடே பலமடங்கு மேல் என்று நினைத்திருப்பான் . உலகத் தலைவர்கள் எல்லாம் இந்தியாவில் பன்மைத்தன்மை இல்லை என்றே நினைத்திருப்பர்கள். இப்படி ஒரு செய்தியை உலகிற்கு கொடுத்துள்ளது இந்த பதவி ஏற்பு விழா .

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழிகளுக்கும் சம உரிமை வழங்ககப்பட வேண்டும் . இந்தி ஆட்சி மொழி என்ற சட்டத்தை நீக்க வேண்டும். 8 வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ஆட்சி மொழி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் . இதற்கும் மேலாக இந்தியாவில் உள்ள அனைவரும் தங்கள் தாய் மொழியை போற்றிப் பேன முன்வர வேண்டும். இல்லையெனில் இந்தியாவில் இரண்டே மொழிகள் மட்டும் அதிகார மட்டத்தில் உயிர் வாழும் . ஒன்று இந்தி மற்றொன்று ஆங்கிலம் . இவை இரண்டும் நமக்கு அந்நியமான மொழிகளே! தேவை மொழி உரிமைச் சட்டம் , அதை மோடி அரசு உடனே நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்பதே மொழி அறிஞர்களின் கருத்தாக இருக்கின்றது.







[vuukle-powerbar-top]

Recent Post