Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தென்னிந்திய தொடர்வண்டித்துறை தமிழகத் தொடர்வண்டித்துறையாக மாற்றம் பெற  வேண்டும் - கண்டன ஆர்பாட்டத்தில் தோழர் தியாகு பேச்சு !!

இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழர் எழுச்சி இயக்கம் தென்னிந்திய தொடர்வண்டித் துறையை கண்டித்து ஒரு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது . இந்த ஆர்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் , தோழர் தியாகு, தமிழர் முன்னேற்ற கழகத் தலைவர் அதியமான் , இயக்குனர் கௌதமன், ஊடகவியலாளர் தி.எஸ் எஸ். மணி , தமிழ் மாணவர் போராட்டக் குழு தலைவர் பிரபாகரன்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் . தமிழர் எழுச்சி இயக்கத் தலைவர் திரு வேலுமணி இந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார்.

தென்னக தொடர்வண்டித் துறையில் தொடர்ந்து தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.  தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது . இந்திய அரசு இந்தி பேசும் மக்களுக்கான வேலைவாய்ப்பை இந்தத் துறையில் அதிகரித்துள்ளது . அதனால் பிகாரில் இருந்தும் , ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கில் இந்தி பேசும் மக்களை தமிழகத்திற்கு கொண்டு வருகிறது தொடர்வண்டித்துறை. இதனால் தொடர்வண்டித் துறையில் தமிழ் பேசத் தெரியாத இந்தியர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள் . தமிழகத்தில் உள்ள சிற்றூர்களில் கூட இந்தியர்கள் தான் வேலை செய்கிறார்கள் . தமிழர்களை வேலைக்கு அமர்த்துவதில்லை இந்தியத் தொடர்வண்டித் துறை . எந்த மாநிலத்தில் தொடர்வண்டித்துறை இயங்குகிறதோ அந்த மாநில மக்களுக்குத் தான் வேலை வாய்ப்பில் முன்னுரிமை  தரவேண்டும் என்ற விதி உள்ளது . இருந்தும் இந்த விதியை மீறி தொடர்வண்டித்துறை இந்தியர்களை அதிக அளவில் வேளையில் அமர்த்தி தமிழர்களை வஞ்சிக்கிறது . இதை கண்டித்து பல்வேறு தமிழர் அமைப்புகள் , கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன .

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர் தியாகு பேசுகையில் , மொழி வழி மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு பொருளாதாரம், வேலை வாய்ப்புகள் , இயற்கை வளங்கள் யாவும் அந்தந்த மாநில மக்களுக்கே உரியதாக வேண்டும். அதற்கு தான் தேசிய இனங்களுக்கான மாநிலங்கள் உருவானது . இப்போது இந்த உரிமை வேற்று மாநில மக்களால் பறிக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணமாக இருப்பது இந்திய அரசே . தரைவழி போக்குவரத்து துறை தமிழகத்திற்கு சொந்தமாக இருப்பது போல் விமானத்துறை , தொடர்வண்டித் துறையும் தமிழக அரசின் கீழ் தான் வரவேண்டும் . மாநில அரசுகள் தான் இவற்றை நிர்வாகம் செய்ய வேண்டும் . தொடர்வண்டித் துறையை கிழக்கு , தெற்கு என்று பிரிப்பது தேசிய இனங்களுக்கும் மாநிலங்களுக்கும் எதிரான செயலாகும். அதனால் தென்னிந்திய தொடர்வண்டித் துறை என்று இருப்பதை தமிழக தொடர்வண்டித்துறை என்று நிர்வாக மாற்றம் பெற வேண்டும் என கூறினார் . தமிழக அரசின் கீழ் இந்த தொடர்வண்டித் துறை வரும்போது தான் இந்தத் துறையில் நூறு விழுக்காடு தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் , தமிழர் படித்தோருக்கே வேலையில் முன்னுரிமையும் கிடைக்கும் என்ற கருத்தையும் முன்வைத்தார். தென்னிந்திய தொடர்வண்டித் துறையின் பொது மேலாளர் பெயர் மிஸ்ரா இவர் ஒரு இந்திக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது . பின்பு எப்படி தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் ?

இப்போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தொடர்வண்டித் துறையில் தமிழர் நலனுக்கான தமிழ் தொழில் சங்கம் ஒன்றை இப்போது உருவாக்கி உள்ளனர் . இந்த சங்கத்தில் அனைத்து தொடர்வண்டி தொழிலாளர்களும் இணைந்து தங்கள் உரிமைக்காக போராட முன்வரவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்போராட்டம் வெல்லும் வரை தாங்கள் ஓயப்போவதில்லை என்ற தமிழ் அமைப்புகள் கூறியுள்ளன .  
[vuukle-powerbar-top]

Recent Post