Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

குஜராத்தில் குஜராத் மொழியை வளர்க்காமல் இந்தியை வளர்த்த மோடி !!

இப்படங்கள் குஜராத்தில் உள்ள பரோடா நகர் தொடர்வண்டி நிலையத்தில் எடுக்கப்பட்டது. இந்த தொடர்வண்டி நிலையத்தில் பேருக்கு கூட குஜராத்தி மொழி இல்லை. பத்தாண்டுகள் குஜராத்தை ஆட்சி செய்த மோடியால் இந்தியை அங்கு வளர்க்க முடிந்ததே தவிர தாய் மொழியான குஜராத்தியை வளர்க்க முடியவில்லை. நகரங்களில் வாழும் குஜராத்திகள்  அனைவரும் இந்தியில் சரளமாக பேசுவார்கள். இந்திப் படங்களைத் தான் பார்ப்பார்கள். இந்தியர்களிடம் இந்தியில் தான் பேசுவார்கள். தற்போது குஜாராத் மக்கள் தங்கள் தாய் மொழி இந்தி தான் என்று எண்ணும் அளவிற்கு வந்து விட்டனர்.

மோடி குஜராத் முதல்வராக இருந்த போதும் அவர் எங்கு சென்றாலும் இந்தியில் தான் பேசுவார் . அவரது சொந்த மாநிலத்தில் கூட இந்தியில் தான் பேசுவார் . இப்படி ஒரு அவல நிலைக்கு இந்திய அரசு குஜராத் மக்களை இட்டுச் சென்றுள்ளது . குஜராத் மட்டுமல்ல வடக்கில் உள்ள அனைத்து இந்தி அல்லாத மாநிலங்கள் தங்கள் தாய் மொழியை இந்தி திணிப்பினால் இழந்து விட்டன. தமிழகம் போல இந்தியை எதிர்த்து நின்று வெற்றி பெற முடியாமல் போன காரணத்தால் தாய் மொழி இழந்த சமூகமாக வட மாநிலங்கள் பலவும் மாறிவிட்டன. தென் மாநிலங்கள் மட்டுமே மொழி உணர்வாளர்களால் சிறுது தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இதையும் உடைக்க இந்திய அரசு பல தந்திரங்களை கையாண்டு வருகிறது.

இந்திய அரசு நம் மொழிகளை மொத்தமாக அழிப்பதற்குள் நாம் விழித்துக் கொண்டால் நாம் பிழைக்கலாம். இல்லையெனில் குஜராத், ராஜஸ்தான் போல மொழி இழந்த அனாதைகளாக நாமும் மாற வேண்டிவரும். தனது மொழியையே வளர்க்க முடியாத மோடி எவ்வாறு இந்தியாவில் உள்ள பெருமைமிக்க பிற மொழிகளை பாதுகாப்பார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. மொழி சம உரிமை சட்டம் வேண்டும் என்றும் , தமிழ் உட்பட அனைத்து மாநில மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும் எனவும் நாம் குரல் எழுப்பும் இவ்வேளையில் , மோடி இதற்கு ஆதரவு தருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . மொழி அழிந்தால் இனம் தானே அழியும் என்பதை நினைவில் கொள்வோம் .

படங்கள் உதவி : Mahesh Mogre 
[vuukle-powerbar-top]

Recent Post