Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நாயகன் உள்ளே வருகிறான்

மேனேஜர் : yes come in . take your seat mr. kathiravan veluchaamy  

கதிர் : நன்றி

மேனேஜர் : i have thru your documents which you sent me through email. you have done your MBA .  you have experience too. Ok .  Kathir ,  you must have gone thru our company's profile . You know what kind of a company we are.  Let me ask a few question. Pls tell me why do you think you are fit for this position.  in what ways you can help this company in terms of company's growth?

கதிர் : ஒரு நிமிடம்..  மன்னிக்க வேண்டும் .

மேனேஜர் : Yes. Kathir ,  you want to say something  .

கதிர் . ஐயா உங்கள் பெயரை வைத்துப் பார்க்கும் போது நீங்க ஒரு தமிழராத் தான் இருப்பீங்கனு நினைக்கிறன். சரி தானே .

மேனேஜர் - yes I am.

கதிர் - நீங்களும் தமிழர் , நானும் தமிழன் , நமக்குள்ள எதுக்கு ஆங்கிலம் . நாம் தமிழிலேயே பேசலாமே , இன்னும் இயல்பாக உரையாடலாமே ..

மேனேஜர்: what are u taking Kathir , this is business, you come for a job interview. Interview should be in english. business னு வந்துட்டா நாம் தமிழ் அது இதுன்னு பார்க்க முடியாது . office ல பிசினஸ் ல எல்லாமே இங்கிலீஷ் தான் ..  shall we proceed now ?

கதிர் : ஐயா மீண்டும் மன்னிக்கவும். நீங்க சொல்லற மாதிரி ஏதாவது சட்டம் இருக்கா  ? வியாபாரம் தாய் மொழியில செய்யக் கூடாதா ? சரி நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன் . நீங்க எங்கெல்லாம் வியாபாரம் செய்யறீங்க .

மேனேஜர் : south india முழுவதும் செய்கிறோம் .

கதிர் : சரி, அப்படீனா தமிழ்நாட்டில உங்க பொருட்களை விற்பனை செய்யறீங்க .. தமிழ் நாட்டுல யாருக்கெல்லாம் பொருட்களை விற்பனை செய்யறீங்க .

மேனேஜர் : தமிழ் நாட்டுல இருக்கிற எல்லோருக்கும் தான் நாங்க விற்பனை செய்யறோம் .

கதிர் : ஐயா தமிழ் நாட்டுல இருக்கிற மக்கள் தொகைய 85 விழுக்காடு தமிழர்கள் தான் . மீதமுள்ள மக்கள்ள பெரும்பாலும் தமிழ் எழுதப் படிக்கச் தெரியும். அதுமட்டு இல்லாம தமிழ் நாட்டோட ஆட்சி தமிழ் தான ? அப்படி இருக்கும் போது உங்க பொருட்களை தமிழர் இடத்துல வணிகம் செய்ய நீங்கள் ஏன் தமிழை பயன்படுத்தக் கூடாது ?

மேனேஜர் : (முகம் மாறுகிறது . வியப்பு ஒரு புறம் ..  ) கதிர் நாங்க தமிழ்ல விளம்பரம் செய்யறோமே!!

கதிர் : தமிழ் ல விளம்பரம் செய்யவில்லனா உங்கள் பொருட்கள தமிழ்நாட்டுல வியாபாரம் செய்ய முடியாதுன்னு தெரிந்த உங்களுக்கு ஏன்யா தமிழ் ல கேள்வி கேட்டு ஒரு நபரை வேலைக்கு எடுக்க முடியாது ?

மேனேஜர் - ம்ம் அது வந்து அது வேற இது வேற கதிர் ..

கதிர் - என்ன ஐயா அது வேற இது வேற . எல்லாம் ஒன்று தான் ஐயா . நம்முடைய சிந்தனை செயல்முறைய மாத்திகிட்டா எல்லாம் சரியாகிடும்

மேனேஜர் : அப்போ office  முழுக்க தமிழ்ல மாத்திக்கணும் ன்னு சொல்ல வரீங்களா கதிர் .

கதிர் - அதில் என்ன சார் தப்பு . நான் பல நாடுகளுக்கு போயிருக்கேன் . ஐரோப்பா நாடுகள்ல அவங்க தாய் மொழியில தான் தகவல் பரிமாரிக்கிறாங்க . அவங்க அலுவல் மொழி முழுவதும் தமிழ் தான் . அரபு நாடுகள் , ஜப்பான் , சீன போன்ற நாடுகள்ல அவங்க தாய் மொழியை தான் பயன்படுத்துறாங்க . இங்கிலாந்துல அவங்க தாய் மொழிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறாங்க .  அப்படி இருக்கும் போது இங்க தமிழ் நாட்டுல மட்டும் அலுவல் மொழி ஆங்கிலத்தில் இருக்கு . இது என்ன நியாயம் சொல்லுங்க ...

சொந்த நாட்டுல அந்நிய மொழி ஆங்கிலம் பேசத் தெரியவில்லைன்னு சொன்னா, உனக்கு வேலை இல்லை னு எத்தனை நிறுவனங்கள் சொல்லுது. இத விட ஒரு வெட்கக் கேடான ஒரு நிலை இருக்கா ? சொந்த நாட்டின் மொழி தெரியலனா த் தான் வெட்கப்படனும் . ஆங்கிலம் , இந்தி,  உருது தெரியலனா தமிழ்நாட்டில இருக்கிற தமிழர்கள் ஏங்க அவதிபடனும் ? வேலை உரிமை இழக்கணும் ?

எனக்கு முன்னாடி வந்த தம்பி , நல்ல படிச்சிருக்கிறார் , ஆனா அவருக்கு ஆங்கிலம் சரளாமக பேச வராது. நீங்கள் உங்கள் அலுவலகத்தை ஆங்கில மயமா வைச்சிருக்கீங்க , அதனால அந்த தம்பி அப்படியே திரும்பி போயிட்டான் . உங்க அலுவலகத்தை பாருங்க , எங்க திரும்பினாலும் ஆங்கிலம் தான் . அலுவலக பயர் பலகை,  உங்கள் பெயர் பலகை, வரவேற்பறை , விளம்பரப்பலகை, தகவல் பலகை, ஊகப்படுத்தும் செய்திகள் இப்படி எல்லாமே ஆங்கிலம் தான் .

இதெல்லாம் தமிழ்ல இருக்கக் கூடாது என யாருங்க உங்ககிட்ட சொன்னது . நம் சொந்த மொழிய எழுதக் கூடாதுன்னு யாருங்க சொன்னது. சொந்த மொழிய பயன்படுத்தாத எந்த சமூகமும் முன்னேறியதாக சரித்திரம் இல்ல.  அந்நிய மொழிகள மட்டுமே நாம பயன்படுத்தினா நாம் அன்னியருக்கு தான் அடிமையா வாழனும் .

மேனேஜர் : கதிர் நீங்க சொல்வதெல்லாம் உண்மை தான் . ஆனா நாங்க பல மானிலங்கள தொழில் பண்ணுறோம்  , அங்கெல்லாம் என்ன செய்யறது . அதனால் தான் english  use பண்ணுறோம் .

கதிர் : ஐயா அதனாலத் தான் சொல்லுறேன் , எந்த மாநிலத்துல வணிகம் செய்யறீங்களோ, அந்த மாநிலத்துல அந்த மாநில மொழிய அலுவல் மொழியாக பயன்படுத்துங்க, அந்த மாநிலத்து மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுங்க. அடுத்த மாநிலத்து மக்களோடு நீங்க தகவல் பரிமாறும் போது ஆங்கிலம் இணைப்பு மொழியாக பயன்படுத்துங்க . அதை விட்டுட்டு , சொந்த மாநிலத்தில சொந்த மொழிய பயன்படுத்தாம ஆங்கிலம் பயன்படுத்துவது என்ன பயன் . எனக்கும் ஆங்கிலம் தெரியும் . ஆனா நான் தமிழர் கிட்ட எங்கேயும் ஆங்கிலம் பேசறதில்லை. தமிழ் தெரியாத வேற்று மாநில மக்கள் , வெளிநாட்டு மக்கள் கிட்ட மட்டும் தான் ஆங்கிலம் பேசுவேன் . இதே போல ஒவ்வொரு தமிழனும் என்ன இடத்திலும் அவனுடைய தாய் மொழிய பயன்படுத்த வேண்டுமுனு விரும்பறேன். என்னுடைய சொந்த தாய் நாட்டுல சொந்த மொழியில் வணிகம் செய்ய விரும்புறேன் , சொந்த மொழியில கல்வி கற்க விரும்புறேன் . சொந்த மொழியில் எல்லா படிவங்களையும் பூர்த்தி செய்ய விரும்புறேன் , என்னுடைய மொழி உரிமைய நான் யாருக்காவும் விட்டுக் கொடுக்க விரும்பல ஐயா .

மேனேஜர் : கதிர் நீங்க சொல்வதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா ?

கதிர் : நிச்சயம் சாத்தியம் தான் . விடுதலை புலிகள் அவங்க ராணுவத்தையே அவங்க தாய் மொழியில் தான்  வழி நடத்தினாங்க , அவங்க ராணுவ கோப்புகள் , ரகசியங்கள் , ஆவணங்கள் எல்லாத்தையும் தாய் மொழியில் தான் வைத்திருந்தாங்க. அதுமட்டுமல்ல , அவங்க நீதித் துறை , வங்கித் துறை , காவல்துறை,   விளையாட்டு  துறை பல துறைகள தமிழ் மொழியை மட்டும் தான் பயன்படுத்தினாங்க . அதனால் தான் அவங்கள அவ்வளவு எளிதாக சிங்கள படைகளால அழிக்க முடியல அவர்களால் உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு ஒரு சிறப்பான அரசை நிர்வாகம் செய்ய முடிந்தது .

தாய் மொழிய நாம் எல்லா நிர்வாகத்திலும் பயன்படுத்தலாம் . அது சில நாட்கள்ல பழகிடும் . தமிழ் தெரிந்தவர்களுக்கு வேலை கொடுங்க ,  தமிழர்களுக்கு வேலை கொடுங்க . பிற மொழியாளர் வந்தா அவர்களை தமிழ் படிக்க சொல்லுங்க . இப்படி செய்வதனால தமிழும் வாழும் , தமிழர்களும் வாழ்வாங்க!!

சரி நான் மனசுல பட்டத சொல்லிட்டேன் , இனி நீங்க எனக்கு வேலை கொடுப்பதும் கொடுக்காதும் உங்க விரும்பம் ஐயா .

மேனேஜர் : கதிர் நீங்க உண்மைய தான் சொல்லி இருக்கீங்க ? நீங்க சொன்ன விசயத்தை நிச்சயம் எல்லாரும் சிந்திக்கணும்னு நானும் ஆசைபடுறேன். நானும் தமிழன் தான் . ஆனா என்னுடைய தமிழ் உணர்வை எப்படி வெளிபடுற துன்னு தான் தெரியல. சொன்ன பிறகு தான் தெரியுது நாம எந்த அளவிற்கு தமிழ் மொழிய பயன்படுத்துறது இல்லன்னு.  இனி முடிந்தவரைக்கும் நானும் தமிழ் மொழிய use பண்ண சாரி பயன்படுத்த முயற்சிக்கறேன் . சரி நமக்குள்ள எதுக்கு ஆங்கிலம் . நாம தமிழையே பேசுவோம் . நானும் உங்ககிட்ட தமிழையே கேள்வி கேட்குறேன் . அது மட்டுமில்லாம என்னுடைய இந்த office ல முடிந்த வரைக்கும் எல்லா தகலவையும் தமிழ்ல போட முயர்சிக்கிறேன் .
இசை ஓடுது சிறுது நேரத்திற்கு பிறகு

காட்சி முடிந்தது ..

வாழ்த்துகள் கதிர் , நீங்க நம்ம கம்பெனியல வேலைக்கு சேரலாம் .....
[vuukle-powerbar-top]

Recent Post