Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஏழை இஸ்லாமிய தமிழர் மாற்றுத்திறனாளி முகமது அலிக்கு உதவி தேவை !

முகமது அலி வயது 32 இரு கால்களும் போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர். ஊன்றுகோல் துணையுடன் தான் இவரால் நடக்க முடியும் . இவரை நம்பி ஒரு வயதான அம்மாவும் , திருமண வயதில் ஒரு தங்கையும் உள்ளனர். இவர் சம்பாதித்து தான் இவரது குடும்பத்தை காப்பாற்றும் சூழ்நிலை உள்ளது. இன்று எந்த வேலையும் இல்லாமல், சம்பாத்தியமும் இல்லாமல் ஒரு வேளை உணவு உண்பதற்கே சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறார். வாகனம் இல்லாததால் இவர் வெளியில் சென்று எந்த தொழிலும் செய்ய இயலவில்லை . தற்போது இவர் இருக்கும் இடம் கோவளம் அருகே உள்ள திருவிடந்தை என்னும் ஊர் . இவருக்கு இந்த ஊரில் எந்த வேலையும் இல்லை . வீட்டு வாடகை கொடுப்பதற்கே மிகவும் சிரமப்படுகிறார்.

இவர் நம்மிடம் பணம் உதவி நேரடியாக எதிர்பார்க்கவில்லை. ஒரு நிரந்தர வருமானம் வரக்கூடிய தொழில் செய்யவே விரும்புகிறார் முகமது அலி. இவருக்கு மிதிவண்டி பழுதுபார்க்கும் வேலை நன்றாகத் தெரியும் , இருசக்கிர வாகனங்கள் காற்றடிக்கும் வேலை, உருளிப்பட்டை ஓட்டை (tube puncture)  பழுதுபார்த்தல் முதலிய வேலைகள் தெரியும். இவர் ஐந்தாம் வகுப்பு தான் படித்துள்ளார் . அதனால் அலுவல் வேலைகளை பார்க்க இயலாது. கைவேலைகள் பார்க்க இவருக்கு ஆர்வம் உள்ளது. உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கமும் இவரிடம் உள்ளது. இவர் சென்னை போன்ற நகரங்களுக்கு குடிபெயரவும் தயாராக உள்ளார். இவர் இருக்கும் இடத்திலோ அல்லது நகரங்களிலோ ஏதாவது இவரது தகுதிக்கு ஏற்ப வேலை தொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தால் இவரது வாழ்க்கை ஒளிமயமாகும் . அதன் பிறகு இவரே தொழில் செய்து முன்னுக்கு வந்துவிடுவார் . ஊன முற்றோருக்கான அரசு உதவித் தொகையும் இவருக்கு கிடைக்காத காரணத்தால் மிகவும் நலிந்த நிலையில் உள்ளார் முகமது அலி.

இவருக்கு உதவ செய்ய இஸ்லாமிய, தமிழ், சமூக  அமைப்புகள் முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவரை போன்றவர்களுக்கு அரசு உதவி செய்ய முடியாவிட்டாலும் நல்ல உள்ளம் கொண்டோர் உதவ முன்வர வேண்டும் . இந்த செய்தியை  பகிர்வதின் மூலமாக ஒரு ஏழை மாற்றுத் திறனாளியின் வாழ்வில் சிறிய வசந்தம் உண்டாக வழி செய்வோம்.  முகமது அலி தொடர்பு எண் -  9500789570.


[vuukle-powerbar-top]

Recent Post