Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

'நான் தான் பாலா' -  இரண்டாயிரம் ஆண்டு ஆரியர் தமிழர் பகையை மிக நுணுக்கமாக வெளிப்படுத்தி உள்ளது ! 

ஏற்கனவே விவேக் ஒரு பண்பலையில் தமிழ் மொழி சமஸ்க்ரித மொழியில் இருந்து பிறந்தது என்று ஒரு தவறான தகவலை வெளியிட்டு தமிழர்களை புண்படுத்தி இருந்தார். இந்நிலையில் 'நான் தான் பாலா' படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று படத்தின் காட்சிகளை பார்த்தேன். இப்படத்தில் மிக நுணுக்கமான முறையில் தமிழர்களை இழிவு செய்துள்ளார் படத்தின் இயக்குனர் கண்ணன். தமிழனின் தாழ்வு மனப்பான்மையும், பிராமணர்கள் என்பவர்கள் தான் சிந்தனையில் செயலில் உயர்ந்தவர்கள் என்ற கருத்தியலை தமிழர் மனங்களில் விதைத்துள்ளார் இயக்குனர் . 

ஒரு பிராமணராக விவேக் நடித்துள்ளார். இவருக்கு பிராமணர்களுக்கே உள்ள உயரிய நற்பண்புகள் உள்ளனவாம். இவரோடு கூட இருக்கும் தமிழர்கள் இழிவானவர்களாம். இப்படத்தில் தமிழர்களாக நடிக்கும் முக்கிய இரண்டு பாத்திரங்களின் பெயர்கள் என்ன தெரியுமா ? ஒருவர் பெயர் பூச்சி மற்றொருவர்  பெயர் காட்டூரான் ? விவேக்கின் பெயர் கூப்பிடுவதற்கு எளிமையாக இருக்கும்படி பாலா ? இது எப்படி இருக்கிறது பாருங்கள் . பெயர்களிலேயே  இன வன்மத்தை கக்கி உள்ளனர்.  

அடுத்தது , தமிழனுக்கு அறம் என்றால் என்னவென்றே தெரியாது . ஒரு பிராமணர் சொல்லித் தான் தமிழன் அறம் என்றால் என்னவென்று கற்றுக் கொள்கிறானாம் . இது எவ்வளவு பெரிய இழிவு. 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் உலகிற்கு அறத்தை வழங்கினான் . அன்புடைமை , ஒழுக்கமுடைமை , கொல்லாமை , கள்ளுண்ணாமை , கூடா நட்பு , மனைமாட்சி என ஒப்பற்ற சமூக அறங்களை சொன்னவன் தமிழன் . ஆனால் இப்படத்தில் விவேக் தமிழர்களிடம் புரியாத சமஸ்க்ரித்த மந்திரத்தை ஓதி அது தமிழர்களின் வாயில் வராது என்பதை போல காட்டி இழிவு செய்துள்ளார்.  சமஸ்க்ரித்த வேதங்கள் மட்டுமே தான் அற நூல்களா ? ஏன் தமிழில் திருக்குறள், ஆத்திச்சூடி, திருவருட்பா போன்ற அற நூல்கள் இல்லையா ? 

இன்னொரு காட்சியில் விவேக்கின் நண்பர் (தமிழர் ) தனக்கு ஜாதகம் கணிக்கும் படி விவேக்கிடம் கூறுகிறார் . அதற்கு விவேக் அவர் நண்பரிடம் உன் ராசி என்ன தெரியுமா, உன் லக்னம் என்ன தெரியுமா, உன் பிறந்த நாள் தெரியுமா , பிறந்த நேரம் என்ன தெரியுமா எனக் கேட்கிறார் . அந்த அப்பாவித் தமிழர் தனக்கு எதுவுமே தெரியாது எனக் கூறவே , விவேக் 'தூ' என்று துப்புகிறார். இவர்கள் சொல்ல நினைக்கும் செய்தி , தமிழர்களுக்கு தன்னுடைய வரலாறே தெரியாது என்பது தான். ஏதோ பிராமணர்கள் மட்டுமே அறிவாளிகள் போலவும் , தமிழர்கள் என்பவர்கள் கத்தியை மட்டுமே தீட்டும் அறிவிலிகள் போலவும் காட்டியுள்ளார் இயக்குனர் கண்ணன். புராணங்களில் தான் தமிழர்கள் பெரிய மீசை வைத்துக் கொண்டு அறிவில்லாத அராஜக செயலை செய்து கொண்டிருப்பது போல் ஆரியர்கள் காட்டியிருப்பார்கள் . ஆனால் இந்த காலத்திலும் அப்படியே தமிழர்களை சித்தரித்து காட்டுவது தமிழர்களை தொடர்ந்து தாழ்வு மனப்பான்மையில் வைத்திருக்கவே திட்டமிட்டு இவ்வாறு செய்துள்ளனர் எனத் தெரிகிறது . 

இன்னொரு காட்சியில் ஜாதகம் பார்த்துவிட்டு சென்ற பெண்மணி விவேக்கிடம் அதற்கான பணத்தை கொடுப்பார் , விவேக் அதை வாங்க மறுப்பார் . ஆனால் கூடவே இருக்கும் தமிழர் , என்னிடம் கொடுங்கள் என்று பணத்தை பெண்மணியிடம் இருந்து பிடுங்குவார் . பிறகு இந்தப் பணம் 'குவாட்டர்'ருக்கு உதவும் என கூறுவார் . இது எவ்வளவு பெரிய இழிவு. 

இப்படி பல இடங்களிலும் தமிழர்களுக்கு அறிவே இல்லை எனவும் , பிராமணர்கள் தான் ஒழுக்கத்திலும் , பண்பிலும் , பக்தியிலும் , அறிவிலும் தமிழர்களை விட உயர்ந்தவர் என்பதை போலும் காட்டியுள்ளது இப்படம் . ஒரு தமிழனாக உணர்ந்து இப்படத்தை பார்த்தால் தான் தமிழர்களை எந்த அளவிற்கு கேவலப்படுத்தியுள்ளார்கள் என்பதை நாம் உணர முடியும் . அதிலும் தமிழனுக்கு சற்றும் தொடர்பே இல்லாத மொழியான சமஸ்க்ரித மொழியில் விவேக் ஓதுவார். அது என்னவென்றே தெரியாமல் தமிழர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். 

மேலும் கோவிலில் மந்திரம் சொல்லும் பிரமாணர்களுக்கு சமஸ்க்ரிதம் மட்டுமல்ல, ஆங்கிலமும் தெரியுமாம். ஆனால் தமிழனுக்கு ஆங்கிலமும் தெரியாதாம். தமிழனை ஒரு காட்டுமிராண்டிப் போலவே இப்படத்தில் காட்டியுள்ளனர் . இப்படியான படத்திற்கு தமிழர்கள் கண்டிப்பாக தங்களது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் . இப்படத்தை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இனிமேலும் தமிழர்களை இழிவு செய்யும் இது போன்ற படங்கள் வெளிவரக் கூடாது. அதை தமிழர்கள் நாம் தான் உறுதி செய்ய வேண்டும். 

 



   



[vuukle-powerbar-top]

Recent Post