Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தித் திணிப்புக்கு எதிரான மொழியுரிமை போராட்டம்! தமிழை தமிழகத்தில் கட்டாய பாடமாக்குவோம் !

தமிழ்த் தேசிய உறவுகளே !! தமிழகம் பல போராட்டங்களை சந்தித்து வரும் இவ்வேளையிலே நாம் மிக முக்கியமான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். அது நம் இனத்தின் அடையாளமாக விளங்கும் நம் மொழி காக்கும் போராட்டமாகும்.

இந்தியம், முன் எப்போதும் இல்லாதவாறு தமிழ் மொழியை அழிக்கும் வேலையை செய்யத் தொடங்கி உள்ளது.  தமிழக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை கொண்டு வந்து தமிழ் வழிக் கல்வியை மக்கள் புறக்கணிக்கும்படி செய்தார்கள். அரசுப் பள்ளிகளை விட்டால் தமிழ் வழியில் வேறு எங்கும் படிக்கவும் முடியாத நிலை தமிழருக்கு வந்தது. அதன் பின்பு தனியார் பள்ளிகளில் தமிழ் கட்டாயம் என்ற சட்டத்தை எதிர்த்து நீதி மன்றம் சென்றார்கள். தமிழகத்தில் தமிழ் பாடம்  கட்டாயமாக்கக் கூடாது என போர்க்கொடியை தூக்கியது தனியார் பள்ளிகள் . அதன் பின்பு தமிழகத்தில் இந்தி பாடம் கட்டாயம் வேண்டும், தமிழ் எங்களுக்கு வேண்டாம்  என தமிழக மாணவர்களை வைத்தே சொல்ல வைத்தார்கள்.

இப்போது இந்திய அரசு இந்தியே தேசிய மொழியாக வேண்டும் , இந்தியே ஒற்றை ஆட்சி மொழியாக அதிகாரம் செலுத்த வேண்டும் என திட்டம் தீட்டுகிறது. இதனால் இந்தியாவில் உள்ள பல மொழிகள், பண்பாடுகள் அழியும் நிலை வந்துள்ளது . இதை எதிர்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை மட்டுமல்ல . இந்தியை தாய் மொழியாகக் கொள்ளாத ஒவ்வொரு இந்தியனின் கடமையும் கூட. மற்ற மாநிலங்களை வழிநடத்தும் பொறுப்பு தமிழகத்திற்கு உள்ளது . காரணம் நாம் தான் மொழிப்போராட்டம் செய்து உலகையே நம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தோம். இப்போதும் நாமே மூன்றாம் கட்ட மொழிப் போராட்டத்தை வழி நடத்துவோம்.

மற்ற மாநிலங்களிலும் இந்தி எதிர்ப்பு போராட்டம் வலுப் பெறவுள்ளது. தமிழகம் தலைமை தாங்கி இந்த மூன்றாம் மொழிப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் . தமிழ் அமைப்புகள் , மக்கள் அமைப்புகள் இந்த போராட்டத்தில் ஈடுபட வேண்டும் . நாம் ஒன்றானால் நமக்கான மொழி உரிமைகளை வென்றெடுக்கலாம். வரும் 28 ஜூன் அன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முதல் மொழி உரிமை போராட்டத்தை ஒருங்கிணைப்பு செய்கிறது . இப்போரட்டத்தில் தமிழ் அமைப்புகள் பலவும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுகிறோம். உங்கள் மேலான ஆதரவை நாடி நிற்கிறோம். வாருங்கள் தோழர்களே , நம் மொழியை ஆட்சி மொழியாக்குவோம். தமிழகத்தில் தமிழ் மொழியை கட்டாயமாக்குவோம். தாய் மொழியை கற்றுத் தர மறுக்கும் தனியார் பள்ளிகளின் திமிரை அடக்குவோம்.  தமிழ் மொழி காத்து தமிழ் இனத்தை காப்போம்.




[vuukle-powerbar-top]

Recent Post