Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

'இந்தி' மொழி வெறியர்கள் தமிழர்கள் மீது இத்தனை காலம் திணித்துள்ள  பொய்யான கருத்துக்களில் சில.

௧. இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி. 99 விழுக்காடு இந்திய மக்களுக்கு இந்தி தெரியும்.

௨. தமிழ் நாட்டை தாண்டினால் இந்தியா முழுவதும் இந்தி தான் பேசப்படுகிறது.

௩. தமிழர்களை தவிர இந்தியாவில் யாரும் இந்தித் திணிப்பை எதிர்க்கவில்லை.

௪. இந்தி படித்தால் தான் பன்னாட்டு, பெரு நிறுவனங்களில் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

௫. இந்தி கற்காத காரணத்தால் தான் தமிழகம் மிகவும் பின்தங்கி உள்ளது , மற்ற மாநிலங்கள் எல்லாம் முன்னேறி விட்டது .

௬. இந்தி தெரியாமல் தமிழ்நாட்டை தாண்டி வேறு எங்கும் வணிகம் செய்ய முடியாது , வேலைகள் செய்ய முடியாது.

௭. கேரளா, கர்நாடகா போன்ற இந்தி அல்லாத மாநிலங்களில் வாழ வேண்டும் என்றாலும் இந்தி தான் தெரியவேண்டும். அவர்கள் மாநில மொழியை கற்க வேண்டிய அவசியம் இல்லை.

௯. இந்தி தெரியாமல் இப்போது சென்னையில் கூட குப்பைக் கொட்ட முடியாது .

௧௦. இந்தி மொழி தமிழகத்தில் கட்டாய பாடமாகி இருந்தால் தமிழன் டெல்லி சென்று அரசியலில் பெரிய நிலையில் இருந்திருப்பான்.

௧௧ . தமிழன் இந்தி கற்காத காரணத்தால் தான் அவன் இரண்டாம் தர குடிமகனாக இந்தியாவில் கருதப்படுகிறான்.

௧௨ . தமிழர்களுக்கு இந்தி தெரிந்திருந்தால் ஈழப் பிரச்சனை , தமிழகப் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளை இந்தியாவெங்கும் தமிழர்கள் கொண்டு  சென்றிருப்பார்கள் .

௧௩. தமிழ் மட்டுமே தெரிந்தால் , அது சோறு போடுமா ? போடாது. அதனால் தமிழ் நாட்டில் வாழ வேண்டும் என்றாலும் கூட தமிழ் மொழி அவசியமில்லை இந்தி தான் அவசியம்.

௧௪. இந்தி படிக்காத காரணத்தால் தான் தமிழர்கள் எல்லா உரிமைகளையும் , வாய்ப்புகளையும் இழந்து விட்டனர். இந்தி மட்டும் கற்றுக் கொண்டிருந்தால் இந்நேரம் தமிழன் உலக அளவில் பல சாதனைகளை நிகழ்த்தி இருப்பான் .

௧௫ . தமிழை தமிழகத்தில் கட்டாயப் பாடமாக்கக் கூடாது . இந்தியைத் தான் கட்டாயப் பாடமாக்க வேண்டும். அது தான் தமிழர்களுக்கு நல்லது.

௧௬ அயல் மொழியான ஆங்கிலத்தை ஏற்கும் தமிழர்கள் அருகில் உள்ள உள்நாட்டு அயல் மொழியான இந்தியை வழக்கு மொழியாக ஏற்பதில் எந்த தவறும் இல்லை.

௧௭ . தமிழை ஏன் இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் ? அனைவராலும் பேசப்படும் இந்தியே இந்தியர்கள் அனைவரையும் ஆட்சி செய்வதற்கான பொது மொழி.  அதுவே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். மற்ற மொழிகளுக்கு அந்த தகுதிகள் இல்லை .

௨௮ . தமிழ் மட்டுமே படித்ததால் இங்குள்ள பல தமிழர்கள் வாழ்கையில் நாசமாகி போய்விட்டனர். அதனால் தமிழர்கள் அனைவரும் இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்வில் வசந்தம் பொங்கும்.

௨௯ . இந்தி பேசும் மாநிலங்கள் அனைத்தும் பொருளாதாரத்தில் மிகவும் உயர்ந்து இருக்கிறது . இந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளனர்.

இப்படியான பல பொய்ப் பரப்புரைகளை கடந்து தமிழகம் இந்தித் திணிப்பை எதிர்த்து நிற்கிறது என்றால் அது தமிழ் மொழி தமிழர்களுக்கு கொடுத்த தன்மான உணர்ச்சி மற்றும் தன்னம்பிக்கையே ஆகும். வாழ்க தமிழ். வளர்க தமிழர் நாடு!




[vuukle-powerbar-top]

Recent Post