Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கும்பகோணம் பள்ளி தீ விபத்து தீர்ப்பு பெற்றோர்களையும் நம்மையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது !!

ஈழத்தில் செஞ்சோலை படுகொலையில் 62 சிறார்களை இலங்கை வான்படை குண்டு வீசி கொன்றது. இந்த படுகொலையை ஒத்த மிக மோசமான படுகொலை இந்த கும்பகோணம் கிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் நடந்த தீ விபத்தாகும். முன்னது சிங்கள அரசின் இனவெறி காரணமாகியது . பின்னது தனியார் பள்ளிகளின் பணவெறியும் அரசின் அலட்சியப் போக்கே காரணமாகியது.

இந்தத் தீர்ப்பில் பள்ளி தாளாளர் , நிறுவனர் , பள்ளி தலைமை ஆசிரியர்   சமையல் செய்தவர் , மேற்பார்வையாளர் என பள்ளி தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை கிடைத்துள்ளது. அரசு அதிகாரிகள் சிலருக்கு மட்டுமே குறைந்த பட்ச தண்டனை கிடைத்துள்ளது . பலரும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.  இது குழந்தையை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. பெற்றோருக்கு யாரும் எந்த ஆறுதலும் வழங்க முடியாது. சரியான நீதி கிடைக்கும் என்று பத்தாண்டுகள் காத்திருந்த பெற்றோர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

நீதிமன்ற தண்டனையில் இருந்து தப்பித்தவர்கள்  அவர்கள் மனசாட்சிக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் . இந்த விபத்தில் இருந்து கிடைக்கக் கூடிய படிப்பினையை அரசும், பெற்றோர்களும் பெறுதல் வேண்டும். பள்ளிகளை முறையாக கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அரசு அதிகாரிகளுக்கு கூடுதலாக இருக்க வேண்டும். அதே போல அளவிற்கு அதிகமான பிள்ளைகளை கொண்ட  இட வசதியில்லா பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கக் கூடாது என்ற விழிப்புணர்வும் பெற்றோர்களுக்கும் வேண்டும். இப்போது தான் பள்ளி வாகனங்கள் ஓரளவிற்கு முறைப்படுதப்பட்டுள்ளது. இதை அரசு செய்ததை போலவே பள்ளிகளிலும் தீவிபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் அவரச கால ஒத்திகை போன்றவற்றை பள்ளி நிர்வாகம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி விபத்து வருமுன் காப்போம்.



[vuukle-powerbar-top]

Recent Post