Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ்த் தேசியத்திற்கு கிடைத்த வரலாற்று  வெற்றி !!

மாவட்ட  நீதிமன்றங்கள் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்த் தெரியாத நீதிபதிகள் ஆங்கிலத்தில் இதுநாள் வரை தீர்ப்பு வழங்கினர். ஆனால் இது  தமிழ் ஆட்சி மொழி சட்டத்துக்கு முரணானது என்பதால் ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்குவதை ரத்து செய்ய வேண்டுமென்று தமிழக வழக்குரைஞர்கள் வழக்கு தொடுத்தனர் . அதன் விளைவாக இப்போது நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது . இனி கீழ் நீதி மன்றங்கள் அனைத்தும் தமிழில் தான் தீர்ப்பு வழங்க வேண்டும்.

இனி மேல் தமிழ் எழுதப்படிக்கத் தெரியாத எவரும் தமிழக நீதிமன்றங்களில் நீதிபதியாக முடியாது என்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது. வெளிமாநில நீதிபதிகள் இனி தமிழக மாவட்டங்களில் தீர்ப்பு வழங்க முடியாது. இதனால் தமிழர்களுக்கு புரியும் வண்ணம் தமிழர்களால் தமிழில் தீர்ப்பு வழங்கப்படும். இதே போல உயர்நீதி மன்றத்திலும் தமிழில் வழக்காடலாம் என்ற நிலை விரைவில் உருவாகவும்,  இந்தி அரசு நிறுவனங்களில் தமிழை அலுவல் மொழியாக்கவும் நாம் தொடர்ந்து போராடுவோம்.

தமிழில் தீர்ப்பு வழங்க வேண்டும் என போராடி வெற்றி பெற்ற தமிழக வழக்கறிஞர்களை பாராட்டுவோம் !!

[vuukle-powerbar-top]

Recent Post