Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சைவம் திரைப்படம் பண்டைய தமிழர்களின் கொல்லாமை என்னும் அறத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது . நாம் வளர்த்த ஒரு உயிரை நாமே கொல்லக்கூடாது என்பதை இப்படம் சொல்கிறது. வள்ளுவரும் வள்ளலாரும் இயம்பும் உயிர் இரக்கத்தை ஒரு தமிழ்க் குடும்பம் இறுதியில் எவ்வாறு தங்கள் வாழ்வியல் நெறியாக உள்வாங்குகிறது என்பதை இப்படம் விளக்குகிறது. மேலும் தெய்வங்களின் பெயரால் உயிர்களை பலி கொடுக்க வேண்டாம் என்பதையும் இப்படம் சிறப்பாக சொல்கிறது. இது போன்ற படங்கள் தமிழில் வெளிவருவது அரிது. நல்ல கருத்தியல் கொண்ட படம்.

உடனே திராவிடர்கள் பார்ப்பன அடிவருடி என சண்டைக்கு வரவேண்டாம் . பார்ப்பனர்களுக்கும் உயிர் கொல்லாமைக்கும் எந்த தொடர்பும் வரலாற்று ரீதியாக இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். கீரையும் உயிர் தானே , காய் கனிகளும் உயிர் தானே அதனால் அவற்றை உட்கொள்வது மட்டும் நியாயமா என்று வாக்குவாதம் செய்வோருக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. உணவு முறை அவரவர் தனிப்பட்ட விருப்பம், உரிமை. அதில் யாரும் தலையிட வேண்டிய அவசியமில்லை என்பதே நம் நிலைப்பாடு.

கொல்லாமை என்ற அறத்தை முடிந்தவரை கடைபிடிக்க முயற்சி செய்கிறேன். அதனால் படத்தின் கருத்தை தனிப்பட்ட முறையில் நான் பாராட்டுகிறேன். இதில் வாக்குவாதம் செய்வதற்கு ஒன்றுமில்லை.
[vuukle-powerbar-top]

Recent Post