Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்துத்வாவின் செயல் திட்டத்தை நிறைவேற்றும் பாஜக அரசு. அனைத்து நடுவண் அரசு பள்ளிகளிலும் சமஸ்கிரத வாரம் அனுசரிக்க முடிவு !

பாஜக அரசு தொடர்ந்து தேசிய இனங்களுக்கு எதிரான போக்கை கடைபிடித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம் . இந்தித் திணிப்பு , கச்சத்தீவை மீட்க முடியாது , காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட முடியாது, இலங்கைக்கு எதிரான விசாரணையை ஆதரிக்க முடியாது என கூறிவருகிறது பாஜக அரசு.

ஆர் எஸ் எஸ் அமைப்பின் செயல் திட்டமான சமஸ்ரித்த மொழியை இந்தியாவின் தேசிய மொழியாக்க வேண்டும் என்ற கொள்கையை இப்போது நடுவண் அரசு அமல்படுத்தியுள்ளது . கட்டாய இந்தித் திணிப்பு என்பதும் சமஸ்க்ரித்த மொழியை ஒரு காலகட்டத்தில் தேசிய மொழியாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் நடந்து வருகிறது. இந்திய அரசு நடுவண் அரசு பள்ளிகளுக்கு நான்கு பக்க சுற்றறிக்கை அனுப்பியுள்ளது . அதில் ஒரு வார காலத்திற்கு இந்திய பண்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சமஸ்க்ரித்த வாரமாக அனைத்து பள்ளிகளும் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதாவது சமஸ்க்ரித்த மொழியில் எழுத்து கட்டுரை போட்டிகள் வைத்தல் , கதை சொல்லுதல், நாடகம் நடத்துதல் என பல வகைகளில்  சமஸ்க்ரித்த மொழியை ஊக்குவிக்க வேண்டுமாம் . இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமஸ்க்ரித்த மொழியின் பெருமையை உணர்த்த வேண்டுமாம். மேலும் சமஸ்கிரதம் தான் அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழியாம் . இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது .

இது எவ்வளவு பெரிய அநீதி . பல தேசிய இனங்கள் , பல மதங்களை சார்ந்த மாணவர்கள் படிக்கும் பள்ளியில் சமஸ்கிரத மொழியை மட்டும் ஊக்குவிக்க என்ன அவசியம் . பயன்பாட்டில் இல்லாத ஒரு மொழியை ஊக்குவிக்க என்ன காரணம் . இந்துத்வா கோட்பாட்டை திணிப்பது அல்லாமல் வேறு என்ன நோக்கமாக இருக்க முடியும் . மாநில மொழிகளுக்கு இடமளிக்காத இந்த நடுந அரசு பள்ளிகள் ஏன் சமஸ்கிரத மொழிக்கு தனி இடமளிக்க வேண்டும் . அனைத்து மக்களும் , மொழிகளும் சமம் என்றால் அந்தந்த மாநில மொழிகளுக்கு ஒரு வாரம் முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களுக்கு மண்ணின் மொழி , பண்பாடு வரலாறு சொல்லிக் கொடுக்கலாமே ! அதை விட்டு விட்டு இந்தியை மட்டுமே ஊக்குவிப்பது , சமஸ்க்ரித்த பண்பாட்டை திணிப்பது என்பது அநீதியானது,  ஏற்க முடியாதது. இத்தகைய நடவடிக்கையை நடுவண் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோறோர்கள் எதிர்க்க வேண்டும் . பள்ளி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். 
[vuukle-powerbar-top]

Recent Post