Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கைத் தமிழர்களுக்காகத் தனி நாடு கோர மாட்டோம் என்றும் ஒன்றுபட்ட இலங்கையையே ஏற்றுக் கொள்கிறோம் என்றும்
தமிழத் தேசீயக் கூட்டமைப்பு  இலங்கை உச்சநீதிமன்றத்தில் உறுதி மொழி அளித்துள்ளது.

இது சிங்கள அமைப்புகள் இவர்கள் மீது தொடுத்துள்ள வழக்கின் அடிப்படையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இவ்வாறு எழுதிக் கொடுத்துள்ளது . காரணம் தனிஈழம் என்ற கோரிக்கையை அக்கட்சி முன்னிருத்தினால் தேர்தலில் நிற்கும் தகுதியை சிங்கள அரசு தடை செய்யும். குறைந்த பட்ச அதிகாரம் தேர்தல் மூலம் கிடைக்கும் என நம்பும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தங்கள் இருப்பை தக்கவைக்க தனி ஈழ கோரிக்கையை கைவிடுவதாக நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளனர்.

இதே போல 1963 ல் இந்திய அரசு பிரிவினை கோரும் கட்சிகளை தடை செய்ய சட்டம் கொண்டுவந்தது. அப்போது கட்சியை தக்க வைத்துக் கொள்ள திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டார்.

இரண்டு நிகழ்விலும் சர்வாதிகார அரசுகள், உரிமைகள் இழந்து வாடும் தேசிய இனங்களை ஒடுக்கவே இப்படியான உத்தியை கடைபிடித்தது. இலங்கைக்கு இந்தியாவே இந்த உத்தியை கையாளுமாறு சொல்லிக் கொடுத்திருக்கலாம். இந்தியாவும் இலங்கையும் தேசிய இனங்களுக்கு உரிய உரிமைகளை வழங்காமல் அவர்களை நசுக்கி ஆள்வதில் ஒரே கொள்கையை கடைபிடிப்பவைகள் தான்.

தமிழ் ஈழமும் தமிழகமும் உலகத் தமிழர்களின் ஒன்றிணைந்த தாயகமாகும் . இவற்றின் இறையாண்மை நசுக்கப்படும் போது இரு தாயக மக்களும் தனி நாடு என்ற இலக்கை நோக்கி பயணிப்பதை யாராலும் தடுக்க முடியாது. இலங்கையில் இருக்கும் தமிழ் கட்சிகள் அச்சத்தின் காரணமாக தனிநாடு கோரிக்கையை கைவிடலாம் . ஆனால் உலகத் தமிழர்கள் எந்த நிலையிலும் தனி ஈழம் என்ற கோரிக்கையை கைவிடமாட்டார்கள். தமிழகத்தின் இறையாண்மையையும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் .



[vuukle-powerbar-top]

Recent Post