Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மெரீனா கடற்கரையில் குதிரை ஏற்றத் தொழிலை தடை செய்யும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் !

மெரீனா கடற்கரையில் குதிரை ஏற்றத்திற்கு  தடை கொண்டு வர முயற்சி நடக்கிறது. குதிரைகள் சரியாக பாமரிக்கப்படுவதில்லை, பொதுமக்களை குதிரைகள் தாக்குகிறது, குதிரை உரிமையாளர்கள் குழந்தைகளின் நகைகளை திருடுகிறார்கள் போன்ற குற்றச்சாட்டை சிலை வைத்துள்ளனர் . இதன் அடிப்படையில் குதிரை ஏற்றத்தை   தடை செய்ய வேண்டும் உளவுத் துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

ஒவ்வொரு ஊருக்கும் , சுற்றுலாத் தலங்களுக்கும் ஒரு சில சிறப்புகள் உள்ளன . அந்த வகையில் மெரீனா கடற்கரையில் குதிரை ஏற்றம் ஒரு சிறப்பாகும் . குழந்தைகள் அதிகம் விரும்பும் பொழுது போக்கு நிகழ்வுகளின் இந்த குதிரை ஏற்றமும் ஒன்றாகும். கடற்கரையில் குதிரையில் பயணிப்பது பலருக்கும் சிறப்பான சுற்றுலா அனுபவத்தை தருகிறது. பல வெளிநாட்டினரும் இங்கு வந்து குதிரை ஏற்றத்தை ரசிக்கின்றனர். மேலும் இந்த குதிரை ஓட்டும் தொழிலை நம்பி நூறு குடும்பங்களும் வாழ்கின்றன.

அதனால் மெரீனா கடற்கரையில் பல ஆண்டு காலமாக நடைபெறும் இந்த குதிரை ஏற்றத்தை அரசு தடை செய்தல் எந்த வகையிலும் நியாயம் இல்லை. குதிரைகளின் பராமரிப்பை அரசு சாரா நிறுவனங்கள் மூலமாக அரசு உறுதி செய்யலாம். குதிரை ஓட்டத்திற்கு ஒரு சில இடங்களை அரசே ஒதுக்கிக் கொடுக்கலாம் . குதிரை ஏற்றத்திற்கான விலையை ஒழுங்கு படுத்தலாம் . சிறுவர்களை இந்த தொழிலில் ஈடுபடுவதை தடுக்கலாம். இது போன்ற செய்கைகளால் குதிரை ஏற்றத்தை  அரசு முறைப்படுத்தலாமே தவிர தடை செய்யக் கூடாது என்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்கு முன்வைக்கிறது. குதிரை ஏற்றத் தொழிலாளிகளுக்கு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஆதரவு வழங்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.



[vuukle-powerbar-top]

Recent Post