Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தை பாலவைவனமாக்கும் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை கைவிடக் கோரி டெல்லி வரை சென்று மனு கொடுத்த டெல்டா புலி அமைப்புக்கு நம் மனமார்ந்த பாராட்டுகள் !!

தமிழகத்தை பிடித்து உலுக்கும் பல பிரச்சனைகளுள் மீத்தேன் பிரச்சனையும் முக்கியமான ஒன்றாகும் . மீத்தேன் திட்டம் இந்தியாவில் வேறு எங்கும் செயல்படுத்தாமல் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையை தேர்வு செய்து கொடுத்தது இந்திய அரசு . ஏற்கனவே தண்ணீர் இன்றி தவிக்கும் ஆறுகள் ஒருபுறம் இருக்க இந்த மீத்தேன் திட்டத்தால் தஞ்சை மாவட்டம் முழுவதும் நிலத்தடி தண்ணீர் சுரண்டப்பட்டு பத்து ஆண்டுகளில் விவசாயம் என்பது முற்றிலும்  அழிந்து விடும் நிலை ஏற்படும். அதனால் தஞ்சை விவசாயிகள் அனைவரும் வேறு வழியின்றி போராடத் தொடங்கினர்.

தமிழக முதல்வர் தனது தேர்தல் அறிக்கையில் மீத்தேன் திட்டத்தை எதிர்பதாக அறிவித்தாலும் கூடங்குளம் விடயத்தில் எப்படி அவர் எதிர் திசையில் பயணித்து போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்தாரோ அவ்வாறே மீத்தேன் விடயத்திலும் செய்கிறார் என்ற சந்தேகமும் எழுகிறது. மீத்தேன் விடயத்தில் முதல்வர்  கள்ள மௌனமே சாதித்து வருகிறார். இதை முற்றிலும் தடுப்பததற்கு எந்த நடவடிக்கையும் முறையாக எடுக்கவில்லை.

இந்நிலையில் தான் டெல்டா புலிகள் எனப்படும் இளையோர் அமைப்பு நேரடியாக தங்கள் மண்ணை காக்க களமிறங்கியது. தமிழ் அமைப்புகள் பொதுவாக தங்கள் கோரிக்கையை நேரடியாக டெல்லி சென்று வைப்பதில்லை , தமிழக  பிரதிநிதிகளை சந்தித்து தமிழகத்தில் தான் கோரிக்கை வைப்பார்கள் . ஆனால் இப்போது நேரடியாக டெல்லிக்கே சென்று தமிழர்கள் தங்கள் கோரிக்கையை வைக்கத் தொடங்கியுள்ளது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றம் ஆகும். டெல்டா புலிகளைத் தொடர்ந்து தமிழக உரிமைகளை நிலைநாட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் டெல்லிக்கு இனி விரைவார்கள் எனத் தெரிகிறது.

இந்த நிகழ்வைக் குறித்து குறித்து டெல்டா புலிகள் அமைப்பினர் கூறியுள்ளதாவது ..

டெல்டா புலிகள் அமைப்பு சார்பில் மீத்தேன் திட்டத்தை கைவிடக்கோரி நேற்று மாலை புதுதில்லி பாராளுமன்றத்தில் ராஜ்யசபா உறுப்பினர் திருமதி. கனிமொழி அவர்கள் பெரும் முயற்சியுடன் சுற்றுசூழல் அமைச்சர் திரு.பிரகாஸ் ஜவடேகர் அவர்களை சந்தித்து கோரிக்கை மற்றும் திட்டத்தின் கடும் விளைவுகளை தெளிவாக எடுத்துரைத்தோம், மேலும் அதன் தொடர்ச்சியாக இன்று காலை பத்து மணியளவில் சாஸ்திரி பவனில் பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்களை சந்தித்தோம் அச்சந்திப்பில் அத்துறை சார்ந்த அதிகாரிகளும் இடம் பெற்றனர். அக்கணம் டெல்டா புலிகள் அமைப்பு மீத்தேன் திட்டத்தை கைவிடக்கோரியும் அதன் பாதிப்புகளையும் எடுத்துரைத்தது. நீண்ட நேர விவாதத்தின் பின் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக அமைச்சர் அவர்களும் உறுதியளித்துள்ளார்....

டெல்டா மாவட்டங்ககளில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை The Great Eastern Energy Corp pvt ltd நிறுவனத்திடம் கடந்த கால மத்திய அரசு ஒப்பந்தமிட்டுள்ளது, இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஒட்டுமொத்த தமிழகமும் பாலைவனமாகும் நிலை ஏற்படும் மேலும் இத்திட்டத்தை நிரந்தர தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தினோம். எங்களின் இவ்விவாதம் முப்பது நிமிடங்களுக்கு மேலாக நிகழ்ந்தது இத்தோடு இதற்கான ஆவணங்களையும் சமர்பித்தோம். இறுதியாக அமைச்சர் அவர்கள் இத்துறை சார்ந்தவர்களிடம் கலந்து ஆலோசித்து பின் இதற்கான முயற்சிகளை எடுப்பதாக உறுதியும் அளித்துள்ளார். டெல்டா புலிகள் சார்பில் நன்றி தெரிவித்தோம்...

[vuukle-powerbar-top]

Recent Post