Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புதிதாக உருவாகியுள்ள தெலங்கானா தேசம் ஒரு தனி நாடாகவே விரைவில் செயல்பட வாய்ப்புள்ளது!

தெலங்கானா பாராளுமன்ற உறுப்பினர் கவிதா யாரும் சொல்லத் துணியாத ஒரு துணிவான கருத்தை இந்திய பாராளுமன்றத்தில் சில நாட்களுக்கு முன் கூறினார்.  காஷ்மீரும் தெலங்கானாவும் இந்திய நாட்டிற்கு சொந்தமான பகுதிகள் அல்ல என்றும் காஷ்மீரும் தெலங்கானாவும் இந்திய அரசால்  வலுகட்டாயமாக இணைக்கப்பட்ட பகுதிகள் என்றும் கூறினார். காஷ்மீர் தேசத்தின் பல பகுதிகள் இந்தியாவிற்கு சொந்தமில்லை, அதனால் காஷ்மீர் வரைபடத்தை இந்திய அரசு திருத்த முன்வர வேண்டும் என்றும் கூறியிருந்தார் கவிதா.

கவிதா கூறியது முற்றிலும் உண்மை. இந்தியாவில் தற்போது உள்ள பல பகுதிகள் இந்தியாவிற்கு சொந்தமானது அல்ல. பல சமஸ்தானங்கள் தானாகவே முன்வந்து இந்தியாவோடு இணைத்துக் கொண்டது . சில பகுதிகள் இந்திய அரசு கட்டாயப்படுத்தி இணைத்துக் கொண்டது. ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழக நிலப்பரப்பு தானாகவே இந்தியாவோடு இணைந்த பகுதியானது. இந்தியாவோடு இணைய இங்கு யாரிடமும் எந்த கருத்துக் கணிப்பும் நடத்தப்படவில்லை. ஒருவேளை இந்தியாவோடு சேராமல் தமிழகம் தனி நாடாக உருவாகி இருந்திருந்தால் இப்போது தமிழகம் இத்தனை உரிமைகளை இழந்து நின்றிருக்காது.  

இப்போது உருவான தெலங்கான தேசம் தன்னுடைய தனித்துவத்தை தக்க வைக்க நிச்சயம் போராடும் என்றே தெரிகிறது. அதிரடியாக தெலங்கானா அரசு அங்குள்ள குடிமக்களுக்கு தனி குடியுரிமை சீட்டும் தற்போது வழங்க உள்ளது. இதன் மூலம் தெலங்கானா மக்கள் யார் வேற்று மாநில யார் என எளிதாக அடையாளம் காணலாம். தெலங்கான மக்களுக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்படும்.

தமிழகமும் அந்நியர்களின் படையெடுப்பில் இருந்து தப்பிக்க தமிழ் நாட்டிற்கான புதிய குடியுரிமை சீட்டை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். ஒவ்வொரு மாநில மக்களும் அந்தந்த மாநிலத்தில் முழு குடியுரிமையுடன் வாழும் நிலையை உருவாக்க வேண்டும். பிற இனங்கள் மண்ணின் மைந்தர்களை சுரண்டும் நிலையை தடுக்க இப்படியான திட்டங்கள் தேவையாக உள்ளது. மாநில தன்னாட்சியும், அனைத்து மொழிகளும் சம உரிமை பெறுவதும் தான் அடுத்த கட்ட மக்கள் போராட்டமாக உருவெடுக்க உள்ளது .

[vuukle-powerbar-top]

Recent Post