Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தொடர்வண்டி நிதிநிலை அறிக்கை மாநிலங்களின் நலனில் அக்கறை கொள்ளாத அறிக்கை ! ஒரு ஏமாற்று அறிக்கை !!

பல தேசிய இனங்கள் வாழும் பெரும் நிலப்பரப்பு கொண்ட இந்திய ஒன்றியத்தில் தொடர்வண்டிகளின் இரும்புப் பாதைகள் பெரும் இணைப்பாக செயல்படுகின்றன. உலகில் உள்ள மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களின் இந்திய தொடர்வண்டி துறையும் ஒன்று. எப்படி இந்திய நடுவண் அரசால் மாநிலங்களின் நலனில் அக்கறை செலுத்த முடியவில்லையோ அப்படித் தான் தொடர்வண்டி துறையிலும் மாநிலங்களின் நலன் தொடர்ந்து புறக்கணிக்கப் பட்டு வருகிறது.

டெல்லியில் இருந்து கொண்டு அனைத்து மாநில உரிமைகளில் விளையாடும் நடுவண் அரசு எந்த ஒரு சிறப்பான மக்கள் நல திட்டத்தையும் செயல்படுத்த ட முடியாது. நடுவண் அரசின் கீழ் இயங்கும், அதிகாரமிக்க  மிகப்பெரிய துறை தொடர்வண்டித் துறை தான். இந்த துறையின் ஆட்சி மொழி இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே. பாதுகாப்பு அறிவிப்பு கூட மாநில மொழிகளில் இருக்காது. பயணசீட்டு முதல் பயணிகள் பெயர் பட்டியல் வரை மாநில மொழிகள் பயன்பாட்டில் இல்லை.  இந்தத் துறையில் மாநில மொழிகள் மட்டும் புறக்கணிக்கப் படுவதில்லை , இந்தி அல்லாத தேசிய இன மக்களும் வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்படுகிறார்கள். எல்லா கட்டுப்பாடுகளும் ஒரே அரசு கவனித்துக் கொள்வதால் ஒரு சரியான பராமரிப்பு முறை இந்திய தொடர்வண்டிகளில் கடைபிடிக்கப்படுவதில்லை. யானைகளை கட்டி தீனி போடுவது போலத் தான் இந்த தொடர்வண்டிகளின் நிலைமையும். யானைகளை தனித்தனியாக பிரித்து கட்டுப்படுத்தும் எண்ணமும் இல்லை , யானைகளை முறையாக பராமரிக்கும் திறனும் இல்லை இந்த நடுவண் அரசுக்கு .

இவ்வளவு பெரிய துறையில் தனியார் முதலீடு செய்யலாம்  இலாபம் பார்க்கலாம் என்று சொல்லும் நடுவண் அரசு,   ஏன் இந்த தொடர்வண்டிகள் , தொடர்வண்டி நிலையங்கள் , இரும்புப்பாதை , பராமரிப்பு போன்ற பொறுப்புகளை மாநில அரசின் கீழ் கொண்டுவரக் கூடாது ? மாநில அரசின் தொடர்வண்டி சேவைகளை ஏன் மாநில அரசே பூர்த்தி செய்து கொள்ளக் கூடாது? மேற்குலக நாடுகளில் உள்ள தனியார் தொடர்வண்டி நிறுவனங்கள் போல் ஏன் தொடர்வண்டித் துறை மாநில அரசின் கீழ் இயங்கும் நிறுவனமாக மாறக் கூடாது? அப்படி ஒரு சூழல் வந்தால் ஒவ்வொரு மாநிலங்களும் மற்ற மாநிலங்களுடன் இணைந்து பல புதிய பாதைகளை உருவாக்கும் அல்லவா.

மேலும் தமிழகத்தில் மட்டுமே ஓடும் தொடர்வண்டிகள் தமிழக அரசால் பராமரிக்கப்படும். தமிழர்களுக்கே வேலை வாய்ப்பும் கிடைக்கும் .பீகார் போன்ற மாநிலங்களின் இருந்து ஆயிரக்கணக்கில் 'இந்தி' யர்கள் தமிழகம் நோக்கி படையெடுக்க வேண்டிய அவசியம் வராது. மேலும் மாநில அரசுகளே அந்த மாநிலத்திற்கு தேவையான தொடர்வண்டி நிதிநிலை அறிக்கையை தயார் செய்து கொள்வார்கள். பல மாநிலங்கள் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பான தொடர்வண்டி சேவையை வழங்க முடியும். மாநில மொழியை தொடர்வண்டித் துறையில், பயணிகளின் பட்டியலில் பயன்படுத்த முடியும் .

எல்லா அதிகாரங்களையும் தன்னகத்தே குவித்து வைத்துள்ளது  டெல்லி அரசு . இப்போது இந்திய மக்களுக்கு தேவை அதிகாரப் பகிர்வு . டெல்லியின் ஒற்றை ஆட்சி முறை வீழ்த்தப்பட்டு உண்மையான கூட்டாச்சி முறையை இனி வரும் காலங்களில் நாம் தான் நடைமுறைக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ள வேண்டும் . அதுவரை நடுவண் அரசின் நிதிநிலை அறிக்கை என்பது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் ஒரு ஏமாற்று அறிக்கையே!  
[vuukle-powerbar-top]

Recent Post