Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

'இந்தி'யர்களின் போராட்டத்திற்கு உடனடியாக செவி சாய்த்தது 'இந்தி'யா. இந்தியா இந்தி மக்களுக்கான நாடு என்பதை மீண்டும் உறுதி செய்தது.

ஐ.ஏ.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.பி.எஸ்  உள்ளிட்ட முக்கிய பணிகளுக்கான குடிமை சேவைகளுக்கான  தேர்வுகளின் வினாத்தாள்கள் ஆங்கிலத்தில் இருக்கும் என்பதால் இந்தி பேசும் மாநிலங்களில் இந்த தேர்வை எழுதும் கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

திறனறி தேர்வுகளுக்கும், ஆங்கில மொழி வாயிலாக கேள்விகள் கேட்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்தி பேசும் மாநிலங்களின் மாணவ–மாணவிகள் தீவிர போராட்டத்தில் குதித்தனர். இதை அடுத்து இப்பிரச்சனை குறித்து பாஜக வின் ராஜ்நாத் சிங்கும் பிரதமரும் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர். மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு பாடத்திட்ட குறித்த பிரச்சினைக்கு ஒருவாரத்துக்குள் தீர்வு காணும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார். பாடத்திட்டத்தை மாற்றக்கோரும் மாணவர்களின் கோரிக்கையை நடுவண் அரசு ஏற்றுள்ளது.

ஆனால் இதே கோரிக்கையை இந்தி அல்லாத மாநில மக்கள் தங்கள் மொழியில் வேண்டும் என்று பல போராட்டங்கள் செய்த பின்னும் இந்திய அரசு இது வரை செவிசாய்க்கவில்லை . ஒரு வாரத்திற்கு முன்பு கூட தமிழர்கள் நாடவன் அரசு தேர்வுகள் தமிழில் நடத்த வேண்டும் என போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தி அல்லாத மக்கள் ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுத வேண்டும் . இந்தி மக்கள் மட்டும் அவர்கள் தாய் மொழியில் எளிமையாக தேர்வுகள் எழுதலாம் என்ற இந்திய அரசின் சட்டம் ஒரு இனத்திற்கும் மட்டுமே நன்மை பயக்கக் கூடியதாக உள்ளது. இதனால் இந்தியர்கள் மட்டும் அதிக அளவில் அரசு அதிகாரிகளாக தேர்வு செய்யப்படுவார்கள். இந்திய அரசு இந்தி மக்களுக்கான அரசு மட்டும் தான் என்றால் ஏன் மற்ற தேசிய இனங்கள் இந்தியாவோடு இணைந்து வாழ வேண்டும் ? தமிழை ஆட்சி மொழியாக்கு அல்லது தமிழ்நாட்டை தனி நாடாக்கு என்ற கோரிக்கையை தமிழர்கள் இனி முன்வைக்க வேண்டும். 
[vuukle-powerbar-top]

Recent Post