Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

1. There should be two language policy and not three.
2. Mother tongue as medium of instruction up to 5th with English as language. Shift to English medium after 6th with mother tongue as first language and English as second language.

3. All primary education should be under state control. No other streams to be allowed. Primary education should be state subject no role for central government.

4. Provide funds to government schools , hire best talent as teachers and provide best education to all and people in rural areas and for poor. If government can invest in primary education , the business of private education shops will close down.( since most of the private education business is owned by politicians or people close to power , there seems to be systematic effort to destroy government schools so that they get their customers ( students and parents )who can pay)

5. Post office , railways and Banks to use state language first and then English. Only two language.

6. Airlines to make announcements in the language of state from which it is departing , language of destination and English.

7. All government tenders to be in state language and English.

8. Central government advertisement to use respective state language.

இந்தியாவிற்கு தேவையான சிறப்பான மொழிக் கொள்கையை ஒரு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த திரு நாகேந்திர ராவ் என்பவர் முன் மொழிந்துள்ளார். அதை தமிழாக்கம் செய்துள்ளேன்.  இப்படியான கொள்கையை நடுவண் அரசு கடைபிடித்தால் இந்தியவெங்கும் மொழிக்கான , இனத்திற்கான நீதி நிலை நாட்டப்படும் . இந்திய அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும் . மாநில அரசியல் தலைவர்களும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்..

௧. இந்தியா முழுவதும் இரு மொழிக் கொள்கையே தேவை.

௨. ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழிக் கல்வி  கட்டயாம். ஆங்கிலம் ஒரு பாட மொழி மட்டுமே.  ஆறாம் வகுப்புக்கு மேல் ஆங்கில வழிக் கல்வி மாற்றம். தாய் மொழி முதல் மொழி மொழியாகவும் ஆங்கிலம் இரண்டாம் மொழியாகவும் நீடித்தால் வேண்டும்.

௩. அனைத்து தொடக்கப் பள்ளிகளும் மாநில அரசின் கட்டுபாட்டில் இயங்க வேண்டும். மாநில அரசின் பாடத்திட்டத்தை மட்டுமே இப்பள்ளிகளில் வழங்கப் படுதல் வேண்டும் . நடுவண் அரசின் தலையீடு இதில் இருக்கக் கூடாது.

௪. அரசு பள்ளிகளுக்கு நிதி வழங்க வேண்டும். ஏழை எளியவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும்  சிறப்பான கல்வி வழங்க வேண்டும். அதற்கு திறமையான ஆசிரியர்களை இனம்கண்டு அவர்களை பணியில் அமர்த்த வேண்டும் .         அரசு தொடக்கக் கல்வியில் முதலீடு செய்தால் தனியார் கட்டண கல்வி நிலையங்கள் மூடப்படும். (பெரும்பான்மையான கட்டணக் கொள்ளை பள்ளிகள் அரசியல் வாதிகளால் நடத்தப்படுகிறது. இவர்களே அரசு  பள்ளிகள் மூடுவதற்கு காரணமாக அமைகின்றனர்).

௫. அஞ்சல் நிலையங்கள் , வங்கிகள், தொடர்வண்டித் துறை போன்ற நடுவண் அரசு நிறுவனங்களில் மாநில மொழியும் ஆங்கிலமும் மட்டுமே அலுவல் மொழியாக பயன்படுத்துதல் வேண்டும். இரு மொழிகள் மட்டுமே.

௬. வானூர்தி சேவைகளில் எந்த மாநிலத்தில் இருந்து வானூர்தி புறப்படுகிறதோ அல்லது தரை இறங்குகிறதோ அந்த மாநில மொழியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே அறிவிப்புகள் இருக்க வேண்டும்.

௭. அனைத்து நடுவண் அரசு வேலை மற்றும் தொழில் ஒப்பந்தங்கள் மாநில மொழியிலும் ஆங்கிலத்தில் மட்டுமே இருத்தல் வேண்டும்.

௮. நடுவண் அரசு விளம்பரங்கள் அந்தந்த மாநில மொழியில் தான் இருக்க வேண்டும்

- Nagendra Rao T R

[vuukle-powerbar-top]

Recent Post