Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னை 375 ஆவது பிறந்த நாளில் சென்னையை தமிழர் நகரமாக்க சூளுரைப்போம் !

சென்னை இன்று உலக நகரங்களில் முக்கிய இடத்தை பிடித்த பாரம்பரிய நகரங்களில் ஒன்றாகும். நியூயார்க் டைம்ஸ் இதழின் 2014-லில் செல்ல வேண்டிய உலகின் 52 இடங்களின் பட்டியலில், சென்னை 26வது இடத்தைப் பெற்றுள்ளது. 'தருமமிகு சென்னை' என்று வள்ளலார் சென்னை மாநகரத்தை வாழ்த்திப் பாடியுள்ளார்.

இப்படியான பெருமை மிக்க சென்னை நகரை ஆந்திராவிடம் இருந்து மீட்பதற்கு தமிழர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. பாடுபட்டு தமிழர்கள் மீட்டெடுத்த சென்னை நகரம் இன்று பல இனத்தவர்களின் வாழ்வாதார மையமாக , வணிக மையமாக மாறிவிட்டது. தமிழர்களிடம் இல்லாமல் தெலுங்கர்கள் மற்றும் வட இந்திய மார்வாடிகளிடம் சென்னையின் வர்த்தகம் சிக்கி உள்ளது. சென்னையின் பூர்வகுடிமக்கள் மக்கள் இங்கு வாழ வழியில்லாமல் வசிப்பிடம் இல்லாமல் அவர்கள் வீடுகள் இடிக்கப்பட்டு இன்று சென்னைக்கு வெளியே அவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். சென்னையின் பூர்வகுடிமக்கள் மண்ணின் மைந்தர்களாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு சுகாதாரமான இருப்பிடங்கள் கொடுக்கப்பட்டு சென்னைக்கு உட்பட்ட பகுதியிலே வாழ அரசு வழி செய்தல் வேண்டும். இதனால் தமிழ் மக்கள் சென்னையின் வளர்ச்சியிலும், வாழ்க்கையிலும் பிரிக்க முடியாத சக்தியாக உருப்பெறுவார்கள். தமிழர் இல்லாத சென்னை நகரத்தை அரசு உருவாக்க முனையக் கூடாது.  இன்று வடவர்கள் முதலாளிகளாக மட்டும் இராமல் கூலித் தொழிலாளிகளாக , கட்டட தொழிலாளிகளாகவும் இங்கு பெருமளவில் குடியேறுகிறார்கள் . இதனால் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பு குறைகிறது . மண்ணின் மைந்தர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய சென்னையின் பூர்வீக வாசிகளுக்கே அனைத்து வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் .

மேலும் சென்னை இப்போது அந்நியர்களின் , அந்நிய பண்பாடுகளின் தாக்கத்தில் சிக்கி உள்ளது . தமிழ் எழுதப் பேசத் தெரியாத ஒரு பெருங்கூட்டமே சென்னையில் வாழ்கிறது . தமிழர் வரலாறு தெரியாத இவர்கள் மண்ணின் பண்பாடுகளை , மொழியை மதிப்பதில்லை . இதனால் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருப்பதில்லை . அலுவலங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறது. பள்ளிகளில் தமிழ் மொழி ஒரு பாடமாக கூட கற்று தரப்படுவது இல்லை. வங்கிகளிலும் தமிழ் இல்லை. இப்படி எங்கும் எதிலும்  தமிழ் இல்லாத நிலை இப்போது உருவாகியுள்ளது . இந்த நிலையை மாற்றிட தமிழர்களும் தமிழக அரசும் தீவிரமாக செயல்பட வேண்டும் . சென்னையை முற்றிலும் தமிழர் நகரமாக மாற்ற முயலவேண்டும். மீண்டும் சென்னை தமிழர் நகரமாக உருவாக தமிழர்கள் நாம் இந்த நாளில் சூளுரைப்போம் . 
[vuukle-powerbar-top]

Recent Post