Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அம்மா உணவகம், அம்மா சிறப்பங்காடி, அம்மா மருந்தகம், அம்மா தண்ணீர், அம்மா மாளிகை என நீண்டு கொண்டே போகிறது அம்மாவின் அடையாளத் திணிப்பு பரப்புரை. 'அம்மா' என்ற சிறப்புமிக்க தமிழ்ப் பெயர்  வைப்பதை தமிழர்கள் யாரும் வேண்டாம் என சொல்ல மாட்டார்கள். ஆனால் அவற்றில் எல்லாம் ஜெயலலிதாவின்  படத்தை போட்டு இவர்கள் தான் அந்த அம்மா என்று சொல்வது ஒருக்காலும் ஏற்க முடியாது.

மக்களிடம் பெற்ற வரிப்பணத்தை பெற்று தான் அரசு மக்கள் நல திட்டங்களை கொண்டுவருகிறது. ஆனால் அந்த மக்கள் நலத் திட்டங்களில் ஒரு தனி நபரை அடையாளப்படுத்துவது மக்களாட்சிக்கு உகந்தது அல்ல.  தமிழகத்தின் இறையாண்மைக்கு ஏற்ப நமக்கான திட்டங்களுக்கு நாமே பெயர் சூட்ட முடியும் என்ற உரிமை உள்ள போது அதை தமிழினத்திற்கு ஆதரவாக முதல்வர் செயல்படுத்த வேண்டும்.

தமிழர்களின் பெருமைமிக்க சான்றோர்கள் புலவர்களான  வள்ளுவன், இளங்கோ, ஒளவையார், காக்கை பாடினியார், தொல்காப்பியர், கடை ஏழு வள்ளல்கள், ஐம்பெரும் காப்பியங்கள், ஐம்பெரும் திணைகள்,  தமிழ்ப் பெயர் கொண்ட பூக்கள், தமிழிசைக் கருவிகள்,  தரணி ஆண்ட இராசராசன், இராசேந்திரன், கரிகாலன், மூவேந்தர்கள், தமிழ் மொழிக்கு தொண்டாற்றிய அறிஞர்கள் போன்ற பல  தமிழர் பண்பாடு சார்ந்த பெயர்களை ஒவ்வொரு திட்டத்திற்கும் சூட்டினால் தமிழும் வாழும், தமிழர்களின் பெருமையும் வரலாற்றில் நிலைநாட்டப்படும். இதை செயல்படுத்தினால் முதல்வர் அவர்களுக்கும் தமிழர்களிடையே அழியாப்புகழ் கிடைக்கும்.  

தமிழக முதல்வர் இதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டுகோள் விடுக்கிறோம் - தமிழர் பண்பாட்டு நடுவம் . 
[vuukle-powerbar-top]

Recent Post