Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சதுரங்க  வேட்டையில் தமிழியக் கோட்பாட்டின் மேல்  தாக்குதல் நடத்திய லிங்குசாமி!

சதுரங்க வேட்டை திரைப்படத்தில் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில கருத்துக்கள் இருந்தாலும் இப்படத்தின் வாயிலாக தூய தமிழில் பேசுவோர் மீது வன்மத்தை கக்கியுள்ளார் லிங்குசாமி. இனம் திரைப்படத்தின் மூலமாக தமிழினத்திற்கு எதிரான செய்தியை வழங்கினார் லிங்குசாமி. அப்படத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பவே அப்படத்தை திரையரங்குகளில் இருந்து நீக்கினார். அதில் ஏற்பட்ட காயத்தினால் தமிழியக் கோட்பாட்டை  ஏதோ ஒரு வகையில் தாக்க வேண்டும் என்று முடிவு செய்து இப்படத்தில் அதை நிறைவேற்றி உள்ளார் லிங்குசாமி.

சரி அப்படி என்ன தான் இப்படத்தில் உள்ளது ? படத்தில் தீயவனாக காட்டப்படும் நபர், 'வளவன்' என்று தூய தமிழ்ப் பெயர் வைத்துள்ளார். ஆங்கில மொழிக் கலப்பு இல்லாத தமிழில் பேசுகிறார். ஆனால் அவர் குடியும் கும்மாளமும் அடிக்கும் ஒரு ஈவு இரக்கமற்ற கொடுமையான மனிதனாக சித்தரிகப்பட்டுள்ளார். பொதுவாக தமிழை நேசிப்பவர்கள், தமிழியத்தை போற்றுபவர்கள் தூய தமிழில் பேசுவார்கள் அல்லது பேச முயற்சி செய்வார்கள். இன்றைய சூழலில் அத்தகைய முயற்சியை  தமிழர் ஒவ்வொருவரும் வரவேற்க வேண்டுமே தவிர ஏளனப்படுத்தக்கூடாது. மொழியை கொலை செய்யும் மனிதர்களின் நடுவே நல்ல தமிழை கேட்பதே அரிதினும் அரிதாகி உள்ளது. பல நல்ல நூல்களை படித்தால் மட்டுமே அப்படி தூய தமிழில் பேசவும் முடியும். அப்படியிருக்கும் போது தூய தமிழ்ப் பெயர் வைத்துக் கொண்டு  தூய தமிழில் பேசும் ஒருவரை தீயவனாக , சமூக விரோதியாக இப்படத்தில் காட்டியுள்ளது திட்டமிட்ட இனப்பகையே ஆகும். தினமலர் நாளிதழும் அவர்கள் பங்கிற்கு இந்த கதாபாத்திரம் சீமானை நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது என்று கூறி வன்மத்தை உமிழ்ந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு லிங்குசாமியின் திருப்பதி சகோதரர்கள் முகநூல் பக்கத்தில் திருக்குறளையும் இஸ்லாமியர்களையும் அவமதிக்கும் வகையில் ஒரு படச் செய்தியை வெளியிட்டனர் இப்படத்தின் குழுவினர். அதற்கு தமிழர் தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது . இருப்பினும் அந்த செய்தியை அவர்கள் நீக்கவில்லை.  இதன் மூலமாக  லிங்குசாமி தொடர்ந்து அவருடைய படங்களில் தமிழுக்கும் , தமிழர்களுக்கும் எதிரான செய்தியை பரப்பி வருகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

லிங்குசாமி இத்தோடு அவருடைய தமிழினப் பகையை திரைப்படங்களில் காட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் தமிழர்களால் விரைவில் அவர் புறக்கணிக்கப்படுவார் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். லிங்குசாமியின் தமிழிய விரோதப் போக்கை தமிழர் பண்பாட்டு நடுவம் வன்மையாக கண்டிக்கிறது.
    
[vuukle-powerbar-top]

Recent Post