Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உண்மையை சொன்னால் கொடிய வழக்கு பாயும்!  தேசிய இனங்களை அச்சுறுத்தும் இந்தியாவின் சர்வாதிகார சட்டங்கள் !  

தெலுங்கான மாநில பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தெலுங்கான முதல்வரின் மகளுமான கவிதா பாராளுமன்ற விவாதத்தின் போது காஷ்மீரும், தெலுன்கானவும் சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவிற்கு சொந்தமானது இல்லை என்று கூறியிருந்தார் . இந்த உண்மையை அவர் சொன்னதிற்காக அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத தேசத் துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. 

உண்மையை ஏற்க மறுக்கும் இந்திய நாடு தேசிய இனங்களின் சுதந்திர வேட்கையை முளையிலேயே கிள்ளிவிட இப்படியான நடவடிக்கையை எடுத்து வருகிறது . அதாவது தேசிய இனங்களுக்கு தேவையான தன்னாட்சி அதிகாரங்களும் வழங்க மாட்டோம் , அவர்களின் மொழிகளுக்கு ஆட்சி மொழித்தகுதியும் வழங்க மாட்டோம் , ஆனாலும் அவர்கள் இந்திய ஒன்றியத்தில் இருந்து விடுதலையும் அடையக் கூடாது என்று கூறுகிறது இந்தியம். முன்னூறு ஆண்டகளாக ஆண்டுவந்த ஆங்கிலேயர்களிடம் விடுதலைப் பெற்று தேசிய இனங்கள் இப்போது தங்களுக்கான விடுதலையை நோக்கி நகர்கிறது . இது ஒரு நியாயமான நகர்வாக இருந்தாலும் , இந்திய அரசியல் அமைப்பு தந்திரமான ஒரு சட்டத்தை இயற்றி உள்ளது. அதாவது எக்காரணம் கொண்டும் ஒரு மாநிலம் இந்திய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து விடக் கூடாது. அப்படி பிரிவதற்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் அனுமதி இல்லை கூறுகிறது.  தேசிய இன மக்கள் இந்திய அரசால் எவ்வளவு ஒடுக்கப்பட்டாலும் , நசுக்கப்பட்டாலும் தேசிய இனங்கள் தங்கள் உரிமையை கோரக் கூடாது என்பதே இந்த சட்டத்தின் நோக்கம். இப்படியான சட்டங்கள் மக்களாட்சிக்கு விரோதமானது . தேசிய இனங்கள் தாங்கள் விரும்பினால் பொது வாக்கெடுப்பு எடுத்து இந்திய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து போக முழு உரிமை அளிக்கப்பட வேண்டும். அது தான் உண்மையான குடியரசாகும். மக்களுக்கு விரோதமான சட்டத்தை இயற்றி மக்களை அச்சுறுத்தும் மக்கள் விரோத அரசியல் அமைப்பு சட்டங்களை நாம் தகர்த்தெறிவோம். இந்த காட்டேரி சட்டங்கள் தேசிய இனங்களுக்கு எதிரானது என்பதை எடுத்துக் கூறுவோம் . அனைத்து தேசிய இனங்களும் 'இந்தி'யர்களுக்கு  இணையாக இந்தியாவில் வாழ வகை செய்யும் சட்டங்களே நமக்கு தேவை. அப்படியான அரசியல் அமைப்பு சட்டங்களை கொண்டு வர நாம் பாடுபடுவோம்.  
[vuukle-powerbar-top]

Recent Post