Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் இந்திய தேசியத்தை எதிர்த்து துளிர் விடும் தமிழ்த் தேசியம் !

இந்திய தேசியம் என்பது ஒரு ஆலமரமாக அசுர வளர்ச்சி பெற்று நிற்கிறது . நூறு ஆண்டுகளுக்கு மேல் இந்திய தேசியம் மக்களிடைய வளர்க்கப்பட்டது. 67 ஆண்டுகளாக வலுகட்டாயமாக மக்களிடையே செயற்கையாக திணிக்கப்பட்டது. பள்ளிகள் முதற்கொண்டு, விளம்பரங்கள், தொலைக்காட்சிகள்,  கிரிக்கெட் விளையாட்டு, நாளிதழ்கள் , ஊடகங்கள், திரையரங்குகள், திரைப்படங்கள், வாகனங்கள், அலைபேசி, இணையம் வரை எங்கும் எதிலும் இந்திய தேசியம் திணிக்கப்பட்டது. இப்படி எல்லாவகையிலும் இந்திய தேசியம் திணிக்கப்பட்ட போதும் ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்கள் தங்களுடைய உண்மையான அடையாளத்தை மறந்துவிடவில்லை. எல்லா தடைகளையும் தாண்டி,  எல்லா மயக்கங்களையும் தாண்டி தாங்கள் ஒரு தேசிய இனம் என்பதை தமிழ்த் தேசிய இனமக்கள் என்பதை உணர்ந்து கொண்டனர் தமிழர்கள். தமிழ்த் தேசியத்திற்கான எந்தவிதமான விளம்பரங்கள் இல்லாமல், ஊடக பலம் இல்லாமல் , திரைப்படங்கள் இல்லாமல், கதாநாயகர்கள் இல்லாமல், கிரிக்கட் நாயகர்கள் இல்லாமல் , பொய்யை மட்டுமே பரப்பும்  நாளிதழ்கள் துணை இல்லாமல்  , ஒரு அரசு இல்லாமல் தமிழ்த் தேசியம் தமிழ் மக்களை சென்றடைந்தது. இது இந்திய தேசிய உணர்வைப் போல செயற்கையாக உருவாக்கப்பட்டது அல்ல. இயற்கையாக துளிர் விட்ட  உண்மையான தேசிய இன உணர்வு. முகநூல் முழுவதும் இந்தியாவின் வரலாறு தெரியாமல் , பிரச்சனைகள் தெரியாமல் இந்திய தேசிய கொடியை முகப்பு படமாக வைத்திருக்கும் கோடான கோடி மக்களின் நடுவே தமிழ்த் தேசிய இன மக்கள் கறுப்புக் ஏந்தி தாங்கள் இந்திய தேசிய விடுதலையை புறக்கணிக்கிறோம் என்ற செய்தியை உலகிற்கு சொல்கிறார்கள் என்றால் எப்படியான வீரமுள்ள அறிவுள்ள தமிழ்த் தேசியம் இங்கு இயற்கையாக மலர்ந்துள்ளது என்பதை நாம் காண முடிகிறது. செயற்கை ஒரு நாள் வலுவிழந்து விடும் . இயற்கை ஒரு நாள் வெல்லும் என்ற செய்தியுடன் தமிழ்த் தேசிய இன மக்களுக்கு நம் சிறப்பு வாழ்த்துகள் !



[vuukle-powerbar-top]

Recent Post