Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ்த் தேசிய அமைப்புகள் கட்சிகளை ஒன்றிணைத்த புலிப்பார்வை, கத்தி திரைப்படம் !

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் ஒன்றாக இணைந்து புலிப்பார்வை மற்றும் கத்தி படத்திற்கு எதிராக கூட்டறிக்கை கொடுத்துள்ளனர். தமிழ்த் தேசிய அமைப்புகளும் திராவிடம் சார்ந்த அமைப்புகளும், பொதுவுடைமை கட்சிகளும் மற்றும் பிற அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒரே பிரச்சனைக்கு குரல் கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் இந்த படங்களை உள்ளபடி அதன் பின்னணியில் இருக்கும் காரணத்திற்காக எதிர்கிறார்கள். புலிப்பார்வை படத்தை பொறுத்தவரை அதில் 70 விழுக்காடு படம் பாலச் சந்திரனை சிறார் போராளியாக சித்தரிக்கப் பட்ட காரணத்தால் அவற்றை நீக்காமல் படம் வெளிவரக் கூடாது என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. கத்தி படத்தை பொறுத்தவரை இலங்கை அரசின் ஆதரவு பெற்ற லைக்கா நிறுவனம் இப்படத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நிறைவேற்றாமல் படம் வெளியானால் இதனை அமைப்புகளும் கட்சிகளும் சேர்ந்து திரையரங்கை முற்றுகையிடும் என்பதில் ஐயமில்லை . சில அமைப்புகள் திரையரங்க திரைகளை கிழிக்கவும் தயங்க மாட்டோம் என்ற நம்மிடம் கூறினர். இப்படி ஒரு பலமான எதிர்ப்பு வரும் என்று புலிப்பார்வை மற்றும் கத்தி படக்குழுவினர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இனியாவது தமிழக அமைப்புகள் வைத்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற படக்குழுவினர்  முன்வர வேண்டும் . அல்லது வீணான விளைவுகளை இவ்விரு படங்களும் சந்திக்க நேரிடும் . தமிழ் அமைப்புகளை இந்த விடயத்தில் ஒன்றிணைத்த அண்ணன் பண்ருட்டி வேல்முருகன் அவர்களுக்கு பாராட்டுகள் !
[vuukle-powerbar-top]

Recent Post