Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர் பிரச்சனையை பற்றி தமிழகத்தில் யாரிடம் முறையிட முடியும் ?

புலிப்பார்வை படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இரு நாட்களுக்கு முன்னர் சென்னை காவல்துறை ஆணையிரிடம் கொடுப்பதற்காக ஆணையர் அலுவலகம் சென்றோம். நிறைய பேர்கள் ஆணையரை சந்திக்க காத்திருந்தனர். நம்முடைய கோரிக்கை நகலை ஏற்கனவே காவல் அதிகாரிகள் ஆணையிரிடம் காட்டியுள்ளனர். அதன் பின்னர் ஆணையரை சந்திக்க எங்களை காத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. பத்திரிக்கை நண்பர்கள் பலரும் நாங்கள் பேட்டி கொடுக்க வருவோம் என வெளியில் காத்திருந்தனர். நாங்கள் எட்டாவது மாடியில் ஆணையரை சந்திக்க காத்திருந்தோம் காத்திருந்தோம் இரண்டு மணி நேரம் காத்திருந்தோம் . கடைசியில் வந்த ஆணையரின் உதவியாளர் எங்களை பார்த்து கூடுதல் ஆணையர் இருக்கிறார் அவரிடம் சென்று உங்கள் கோரிக்கையை கொடுங்கள் அவர் நடவடிக்கை எடுப்பார் என்று எங்களை வேறு அலுவலத்திற்கு அழைத்து சென்றார். கடைசியில் கூடுதல் ஆணையர் அரசுக்கு இந்த மனுவை எடுத்து செல்லுங்கள் நாங்களும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று எங்கள் மனுவை வாங்கிக் கொண்டார் . மேலும் நாங்கள் ஆணையரை சந்திக்க காத்திருந்த போது கோபால்ஜி என்னும் இந்துத்வா அமைப்பின் தலைவர் ஆணையரை சந்திக்க வந்திருந்தார். அவர் வந்த பத்து நிமிடத்தில் ஆணையரை சந்தித்து விட்டு கிளம்பி விட்டார் . தமிழர்கள் பிரச்சனைக்காக வந்த நாங்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்தோம்.

இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது . ஆணையர் ஒரு மலையாளி . அவரக்கு தமிழர்களின் உணர்வுப் பூர்வமான பிரச்சனை பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை. தமிழர் அல்லாதவர்கள் எளிதில் ஆணையரை சந்தித்து குறைகளை சொல்ல முடிகிறது . ஆனால் தமிழர் இனம் சார்ந்த பிரச்சனைகளை நம்மால் ஆணையரை சந்தித்து மனு கொடுக்க அனுமதி இல்லை . இதே பிரச்சனை தான் முதல்வர் அலுவலகத்திலும் . அங்குள்ள முதல்வரின் தலைமை செயலர் , ஆலோசகர் என அனைவரும் மலையாளிகள் . இவர்களை மீறி முதல்வரிடம் தமிழினம் சார்ந்த பிரச்சனைகளை தமிழர்கள் கொண்டு சேர்ப்பது கடினம். இந்த பிரச்சனை எல்லாம் மற்ற மாநிலங்களில் இல்லை . அங்கு அனைத்து தலைமை அதிகாரிகளும் அந்தந்த இனத்தை சேர்ந்தவர்களே உள்ளனர் . தமிழகத்தில் மட்டும் தமிழர் அல்லாதவர்களே தலைமை பொறுப்பில் உள்ளனர் . இந்த நிலையை மாற்றினால் அன்றி தமிழர்கள் தன்மானத்துடன் தமிழகத்தில் பிரச்சனைகளை எதிர்கொண்டு வாழ முடியாது. தமிழ்நாட்டின் தலைமை அதிகாரிகள் தமிழர்களாகவே இருக்க நாம் குரல் கொடுப்போம் .



[vuukle-powerbar-top]

Recent Post