Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திருக்குறளை அவமதித்தால் கடும் தண்டனை இயற்ற முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் !

அண்மையில் வேட்டி கட்டிக் கொண்டு வந்தால் அனுமதி மறுக்கும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்றி உள்ளீர் . அதற்கு நம் பாராட்டுகள். அந்த வகையில் திருக்குறளை தொடர்ந்து அவமதிக்கும் திரைப்படங்கள் , விளம்பரங்கள் , சமூக வலைத்தள  பதிவுகளுக்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மான் கராத்தே படத்தில்  தமிழர்களின் புனித நூலான திருக்குறளை இழிவு செய்திருப்பார்கள். இதே போல சமூக வலைதளத்தில் திருக்குறளின் வாசகத்தை மாற்றி நகைச்சுவையாக கேலி செய்து பதிவு செய்து வருகிறார்கள். இதை முற்றிலும் தடுக்க  தமிழக அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும். தமிழர் அற நூல்களை, திருக்குறளை அவமதிக்கும் நபர்களுக்கு, நிறுவனங்களுக்கு, திரைபடங்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்க வேண்டும். ஒரு ஆண்டு சிறையும் அபராதமும் விதிக்க  அரசு சட்டமியற்ற வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழர் பண்பாட்டு நடுவம்


குமாரபாளையம் தனியார் கல்லூரி மாநாட்டில் கலந்து கொள்ள இருந்த சிங்களப் பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். தமிழர் கோரிக்கைக்கு அடிபணிந்தது கல்லூரி நிர்வாகம் !

சிங்கள பெண்கள் இந்த கல்லூரியில் நடக்கும் சர்வதேச தொழில் முனைவோருக்கான  மாநாட்டில் கலந்து கொள்ள கோரிக்கை வைத்திருந்தனர். அதை தொடர்ந்து சிங்கள பெண்கள் இந்த மாநாட்டிற்கு இன்று வருவதாக இருந்தது. தமிழக  அமைப்புகள் கல்லூரிக்கு நேரில் சென்று சிங்கள பெண்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற கோரிக்கை வைத்ததால் கல்லூரி நிர்வாகம் இப்பெண்களை வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. இது தமிழர்களுக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றியாகும்.

தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்த சிங்களம் இப்போது வணிக நோக்கதிற்கு தமிழகத்தையே நம்பி உள்ளது . பல வகைகளில் இங்கு வணிகம், கல்வி, சுற்றுலா, விவசாயம், விளையாட்டு பயிற்சி முதலிய பல உதவிகளை  நாடுகிறது. ஆனால்   இவை எவைக்கும் தமிழகத்தில் இடமில்லை என்று தமிழர்கள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். இது ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தொடரும்.

இன்று செயலில் இறங்கி சிங்கள பெண்களை தடுத்து நிறுத்திய அமைப்புகளுக்கு பாராட்டுகள் .







[vuukle-powerbar-top]

Recent Post