Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தொடர்வண்டித்துறையில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கோரி பல்லாயிரம் தமிழர்கள் திரண்ட மாபெரும் பேரணி.

வரலாற்று சிறப்புமிக்க பேரணி இன்று சென்னை மாநகரத்தை உலுக்கியது. இது வரை தொடர்வண்டித்துறையை எதிர்த்து தமிழர்கள் இவ்வளவு பெரிய போராட்டத்தை முன்னெடுத்தது இல்லை. சுமார் 2000 தமிழர்கள் திரண்டு வந்து இப்பேரணியில் கலந்து கொண்டது காவல்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தென்னிந்திய தொடர்வண்டி துறை மற்றும் இரும்புப்பெட்டி தொழிற்சாலையில் தொடர்ந்து தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி முடித்தவர்கள் இன்னும் வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த இந்தி தொடர்வண்டித்துறை, தமிழர்கள் அல்லாதவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்குகிறது. மேலும் ஆர்.ஆர்.பி எனப்படும் தொடர்வண்டிதுறை  தேர்விலும் இந்திக்காரர்களுக்கு சாதமாக தேர்வு நடத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் தமிழர்கள் முன்வைத்து உள்ளனர். தமிழ் தெரியாத பல்லாயிரம் இந்தியர்கள் முக்கியமான பாதுகாப்பு சார்ந்த வேலையில் அமர்த்தப்படுவதால், மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது என்றும் போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழர்கள் கூறினர். மண்ணின் மொழியான தமிழை இந்தியர்கள் கற்றுக் கொள்வதில்லை. தொடர்வண்டி துறையும் இந்தியர்களுக்கு தமிழை கற்றுக் கொடுப்பதும் இல்லை. இந்தியர்கள் தமிழ் மக்களிடம் இந்தியில் மட்டுமே பேசும் நிலை உருவாகி உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது தமிழர்கள் தான் என்று கூறினார் பேரணியை ஒழுங்கு செய்த தமிழர் எழுச்சி இயக்கத் தலைவர் வேலுமணி.

தென்னிந்திய தொடர்வண்டித் துறை என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழே தெரியாத பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா என்பவரை வேலைக்கு அமர்த்தி உள்ளது இந்திய அரசு . இது தமிழர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஆகும் . இவர் நினைத்தால் பயிற்சிபெற்ற அத்துணை தமிழர்களுக்கும் உடனடியாக வேலை வழங்கலாம் . ஆனால் இவர் அப்படி செய்யாமல் 'இந்தி'யர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கிறார். இது திட்டமிட்ட தமிழர்களுக்கு எதிரான செயலாகும் என்று கூறினர் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழர்கள். மேலும் தொடர்வண்டி துறையில் திட்டமிட்ட இந்தித் திணிப்பும் தமிழ் மொழி புறக்கணிப்பும் காலாகாலமாக நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி , தமுமுக கட்சி , தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் மற்றும் பல தமிழ் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. சீமான், தோழர் தியாகு, தி.எஸ். எஸ் மணி போன்ற முக்கிய தலைவர்கள் நேரில் கலந்து கொண்டு போராட்டத்தை ஆதரித்தனர்.

விரைவில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பிரச்சனை குறித்து இந்திய பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். தமிழக முதல்வர் இந்த தமிழினம் சார்ந்த பிரச்னையை உற்று நோக்கி , தமிழகத்தில் செயல்படும் நடுவண் அரசின் துறைகளில் தமிழர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க ஆவன செய்தல் வேண்டும் என்று இப்பேரணியின் வாயிலாக தமிழர் எழுச்சி இயக்கம் வேண்டுகோள் வைத்தது. 
[vuukle-powerbar-top]

Recent Post