Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தை நாளை  டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்திற்கு  ‘பிரதான் மந்திரி ஜன்–தான் யோஜனா’ (பிரதமர் மக்கள்–நிதி திட்டம்) என்ற பெயர் சூட்டியுள்ளார்

நடுவண் அரசின் அனைத்து திட்டங்களுக்கும் சமஸ்கிருத மொழியில் தான் இந்திய அரசு பெயர் வைக்கும். பல்லாயிரம் திட்டங்கள் மூலமாக சமஸ்கிருத மொழி மக்களிடையே நன்கு வாழ்கிறது. தயவு செய்து யாரும் சமஸ்கிருத மொழியை செத்த மொழியென்று சொல்லாதீர்கள்.

சரி , இப்போது நாம் தெரியவேண்டிய செய்தி சமஸ்கிருத மொழி பற்றியது மட்டுமல்ல . இந்த வங்கிக் கணக்கு பற்றியதும் தான். இந்தியா ஒரு கூட்டாச்சி நாடு தான் என்று வெளியில் சொல்லிக் கொண்டாலும் , இப்போது பிரதமரே நேரடியாக மாநில அரசின் துணை இல்லாமல்  நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லலாம் என்ற நிலையை பாஜக அரசு உருவாக்கி உள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு தேசிய இன மக்களும் நடுவண் அரசின் நேரடியான தொடர்பில் வருகிறது. கணக்கு , வழக்கு , கொடுத்தல் , வாங்கல் அனைத்தும் நடுவண் அரசு நேரடியாக தலையிடுகிறது. மக்களை தங்கள் பிடியில் கொண்டு வருவதின் மூலம் இந்தியாவில் இனி வரும் காலங்களில் ஒற்றை ஆட்சி முறையை அமல்படுத்த பாஜக திட்டமிடுகிறது. மேலும் மக்களின் மொழியில் , அந்த மாநில மொழியில் திட்டங்களுக்கு பெயர் சூட்டாமல்  மக்களுக்கு புரியாத சமஸ்கிருத மொழியில் பெயர் வைக்கிறது . இதனால் ஒட்டுமொத்த இந்திய மக்களும் இந்த திட்டத்தை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். மக்கள் நேரடியாக இந்தி அரசின் கீழ் வந்துவிட்டால் , மாநிலத்தின் இறையாண்மை கேள்விக்குரியதாகி விடும். மாநில அரசு என்று ஒன்று தேவையில்லை , எல்லாமே இந்தி அரசே பார்த்துக் கொள்ளும் என்ற நிலை உருவாகும். இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதார , பண்பாட்டு, மொழி, நில உரிமைகள் என பல உரிமைகளை இழப்பார்கள்.

அதனால் மாநில அரசுகள் இப்படியான மக்கள் நலத் திட்டங்களை மாநில அரசுகளின் ஊடாகவும் , மாநில வங்கிகள் ஊடாகவும், மக்களின் மொழியில் மக்களுக்கு வழங்க வேண்டும் . நடுவண் அரசு நிதியை மட்டும் மாநில அரசுக்கு வழங்கினால் போதும். மக்களை நேரடியாக நடுவண் அரசு எந்த விதத்திலும் கட்டுப் படுத்தக் கூடாது. இதை தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் நடுவண் அரசுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். 
[vuukle-powerbar-top]

Recent Post