Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

போக்குவரத்து மண்டல அலுவலகங்களை (ஆர். டி. ஒ) நீக்க பாஜக அரசு திட்டம் !

மாநில அரசின் கீழ் இயங்கும் அனைத்து போக்குவரத்து மண்டல அலுவலகங்களையும் இனி நிரந்தரமாக நீக்குவதற்கு பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அலுவலகங்களில் ஊழல் பெருக்கெடுத்து உள்ளதாகவும் இடைத்தரகர்கள் தொல்லை அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அரசு , அதனால் இந்த போக்குவரத்து மண்டல அலுவலகங்களை மூடி விட்டு வேறு ஒரு புதிய முறையை அறிமுகப் படுத்த உள்ளதாகவும் பாஜக அமைச்சர் கூறியுள்ளார்.

ஊழல், இயக்க முறை சிக்கல் தான் இந்த முடிவுக்கு காரணம் என்றால் நடுவண் அரசின் கீழ் இயங்கும் கடவுச் சீட்டு அலுவலகம் , வருமான வரித் துறை இவைகளில் எல்லாம் ஊழல் இல்லாமல் இலஞ்சம் இல்லாமல் இடைத் தரகர்கள் இல்லாமல் இயங்குகிறதா என்ற கேள்வி எழுதுகிறது. இந்தியாவிலேயே அதிக இலஞ்சம் வருமான வரித்துறையில் தான் பரிமாறப் படுகிறது. இதை ஏன் மாநில அரசின் கீழ் நடுவண் அரசு கொண்டு வரக்கூடாது?

இப்போதுள்ள மண்டல போக்குவரத்து துறையை நீக்கிவிட்டு புதிய இந்திய தேசிய போக்குவரத்து துறை நிறுவினால் அதில் ஊழல் இருக்காதா ? மேலும் இந்த இந்தி தேசிய துறையில் இந்தி திணிக்கப்பட்டு இந்தியர்களுக்கு தானே வேலை வாய்புகள் கிடைக்கும். அதைத் தானே இந்திய அரசு விரும்புகிறது. இன்று போக்குவரத்து துறையில் ஊழல் உள்ளது அதனால் அதை நீக்க வேண்டும் என்று சொல்லும் இந்திய அரசு நாளை காவல்துறையில் ஊழல் உள்ளது அதனால் அதையும் நடுவண் அரசின் கீழ் கொண்டு வர வேண்டும் என நிச்சயமாக கூறும். மாநில அரசின் பொறுப்பில் இயங்கும் எந்த துறையையும் நடுவண் அரசின் கீழ் கொண்டுவர நாம் அனுமதிக்க முடியாது. அது தமிழ் மக்களின் உரிமையை பறிப்பது போலாகும். இந்திய அரசின் துறைகள் தான் ஒவ்வொன்றாக தமிழக அரசின் கீழ் கொண்டு வரப்படுதல் வேண்டும்.

இன்னும் இதுகுறித்து தமிழக அரசியல் தலைவர்கள் காட்டாமாக அறிக்கை வெளியிடவில்லை . தமிழக அரசு உடனடியாக இத்திட்டத்தை தொடக்கத்திலேயே எதிர்க்க வேண்டும் . இந்திய அரசின் இந்த கூட்டாச்சிக்கு எதிரான செயல்பாட்டை கண்டிக்க வேண்டும் . பாஜக அரசின் சர்வாதிகார ஒற்றை ஆட்சி முறையை நாம் வீழ்த்த வேண்டும். 
[vuukle-powerbar-top]

Recent Post