Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மறக்கடிக்கப்பட்ட தமிழர் விளையாட்டுகளை மீட்டெடுக்க ஒரு முயற்சி !

இன்று மாலை சென்னை விருகம்பாக்கத்தில் தமிழர் உலகம் ஒருங்கிணைப்பு செய்த தமிழக நாட்டுப்புற விளையாட்டுகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் , மாணவர்கள் என பலரும் இந்தக் கருந்தரங்கில் கலந்து கொண்டனர்.

உண்மையில் விளையாட்டில் என்ன உள்ளது?  இதற்கு ஒரு கருத்தரங்கம் தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பலாம். ஆனால் விளையாட்டில் தான் ஒரு தேசத்தின் அரசியல், பொருளாதாரம் , பண்பாடுகள், வரலாறு ஆகிய பல கூறுகள் பின்னிப் பிணைந்துள்ளது என்பதை இக் கருத்தரங்கில் முனைவர் கடாபி விளக்கினார். இது வரை நாம் அறிந்திராத பல விடயங்களை திரு கடாபி அவர்கள் கூறினார். தமிழர்கள் இன்று மறந்த நூற்றுக்கக்கான விளையாட்டுகளை பட்டியலிட்டார் கடாபி. இந்த விளையாட்டுகள் வெறும் பொழுது போக்கும் நிகழ்வாக மட்டுமே இராமல் இதில் உள்ள உடற்பயிற்சி , மனப்பயிற்சி, கணிதப்பயிற்சி, கூட்டு முயற்சி என பல கோணங்களில் தமிழர் விளையாட்டுகளின் சிறப்புகள் விரிகிறது. மேலும் தமிழகத்தில் இருந்து பல விளையாட்டுகள் உலக நாடுகளில் பரவி உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினார் . கிட்டிபுளி விளையாட்டு கிரிக்கெட் விளையாட்டாக மாறிவிட்டது. இது போலவே சுட்டு விளையாட்டு கேரம் விளையாட்டாக மாறியது . சூ-விளையாட்டு கொக்கோ விளையாட்டானது.  சல்லிகட்டு புல் ஃபைட்டு என்ற விளையாட்டாக மாறியது. கோலி விளையாட்டு ஸ்னூக்கர் விளையாட்டாக உருப்பெற்றது. இளவட்டக்கல் பளு தூக்குதலானது. சடுகுடு கபாடியானது.

இப்படி எண்ணற்ற விளையாட்டுகளை உலகிற்கு வழங்கிய தமிழர்கள் இன்று தங்களுக்கென்று ஒரு விளையாட்டு இல்லாமல் எல்லா விளையாட்டுகளையும் ஆங்கிலத்தில் பெயர் வைத்து விளையாடும் அவல நிலைக்கு வந்து விட்டனர். மேலும் இந்த நாட்டுப்புற பாரம்பரிய விளையாட்டுகள் அனைத்தும் தமிழர் மரபை பண்பாட்டை பறைசாற்றுவதாக உள்ளது . இவற்றை மீட்டெடுப்பது என்பது தமிழர் பண்பாட்டை மீட்டெடுப்பது போலாகும். பண்பாட்டை வரலாற்றை இழந்த இனம் மற்ற அனைத்து உரிமைகளையும் தானே இழந்து விடும் என்ற எச்சரிக்கை செய்தியையும் பதிவு செய்தார் முனைவர் கடாபி.

தமிழர்கள் அனைவரும் இனி வரும் காலங்களில் நம் குழந்தைகளுக்கு தமிழர்களின் பாரம்பரிய  விளையாட்டுகளை சொல்லிக் கொடுப்போம் . அவற்றை விளையாட ஊக்குவிப்போம் என்ற செய்தியோடு இந்த கருத்தரங்கம் நிறைவு பெற்றது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தமிழர் உலகம் அமைப்புக்கு நன்றி . 
[vuukle-powerbar-top]

Recent Post