Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர்கள் இந்தி கற்க வேண்டும் என்று கூறிய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி. பதிலடி கொடுத்த தமிழர்கள் !

முகநூலில் முன்னால் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார் . அதாவது தமிழர்கள் தமிழ்நாட்டை தாண்டினால் இந்தி தெரியாமல் துன்பப்படுகிறார்கள். டெல்லிக்கு வருபவர்கள் இந்தி தெரியாமல் தானி/ மகிழுந்து ஓட்டுனர் போன்றோருடன் உரையாட முடியாமல் தவிக்கிறார்கள், அதனால் தமிழர்கள் அனைவரும் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்று கூறினார் கட்ஜு. இருப்பினும் தான் இந்தியை திணிக்க விரும்பவில்லை என்று வாய்க் கூசாமல் பொய் கூறினார்.

இதற்கு தமிழர்கள் மார்கண்டேய கட்ஜு விற்கு சரமாரியாக பதில் அளித்தனர். தமிழகத்திற்கு வரும் இந்தியர்கள் ஏன் தமிழ் கற்றுக் கொண்டு வருவதில்லை என்ற கேள்வி எழுப்பினர் . தமிழர்களை இந்தி கற்க சொல்லும் இவர் ஏன் இந்தியர்களை ஆங்கிலம் படிக்க வலியுறுத்துவதில்லை? அப்படி இந்தியர்கள் ஆங்கிலம் கற்றால் அவர்கள் உலகத்தோடு தொடர்பு கொள்ள முடியுமே என்று கூறினர் தமிழர்கள். மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் அவரவர் தாய் மொழியும் ஆங்கிலம் மற்றும் படித்தால் போதும் , மற்ற மாநிலங்கள் செல்லும் போது அந்த மாநில மொழியை எளிதில் கற்காலம் என்றும் பதில் அளித்தனர்.  எலிகள் அதிகமாக காணப்படும் இந்த நாட்டில் ஏன் புலியை தேசிய விலங்காக அறிவித்து உள்ளோம் , எலியை தேசிய விலங்காக அறிவித்து இருக்கலாமே என்றும் கூறினர். தமிழர்கள் மட்டுமல்லாது கன்னடர்கள் , மலையாளிகள் , தெலுங்கர்கள் பலரும் கட்ஜு வின் பேச்சுக்கு எதிர்வினை ஆற்றினர். இதில் ஒரு பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தான் தமிழ் படிக்காமல் தமிழகம் வந்ததால் பெரிய சிரமத்திற்கு உள்ளானதாக தெரிவித்தார் . யாரையும் இந்தி படிக்க கட்டாயப் படுவதுவது தவறு , அந்தந்த மாநில மொழியை தான் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் என்றும் கூறினார் அந்த பீகாரி .

சரமாரியாக பதிலடி கொடுக்கப்பட்டதால் நிலை தடுமாறிய கட்ஜு தான் ஒரு முன்னாள் நீதிபதி என்பதை கூட மறந்து பலரையும் தனது முகநூல் பக்கத்தில் இருந்து அதிரடியாக தடை செய்தார். இந்திக்கு எதிரான கருத்தை அவரால் ஏற்க முடியவில்லை. அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை, ஆட்சி மொழி தகுதி வழங்குவது குறித்து கடைசி வரை பேசவில்லை கட்ஜு . இப்படிப்பட்டவர் நீதிபதியாக இருந்த போது எப்படியான நீதியை வழங்கி இருப்பார் என்பதை இந்த நிகழ்வின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது .


[vuukle-powerbar-top]

Recent Post