Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பாஜக அரசை பொறுத்தவரை மாநிலங்களின் நலன் முக்கியமில்லை. அண்டை நாடுகளின் நலன் தான் முக்கியம். இதை பாஜகவை சேர்ந்தவர்கள் இந்திய தொலைகாட்சிகளில் தெளிவாகவே சொல்லிவிட்டார்கள். பூட்டான் நாட்டிற்கு 5000 கோடி, நேபாளத்திற்கு 6000 கோடி, இலங்கைக்கு கணக்கு வழக்கு எல்லாம் இல்லை பல்லாயிரம் கோடிகள். இந்த நாடுகள் எல்லாம் இந்தியாவிற்கு எப்போதும் நண்பனாக இருக்க பாஜக இப்படி ஒரு செயல்திட்டத்தை கையாளுகிறதாம். இந்த நாடுகளின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யுமாம்.  

இந்தியாவின் உதவி மற்றும் நன்மதிப்பை பெற வேண்டுமெனில் நாம் ஒரு அண்டை நாடாக இருந்தால் மட்டுமே சாத்தியம் என்று பாஜக உறுதி செய்துள்ளது. மாநிலமாக இருந்தால் உதவி கிடைக்காது மாறாக பிரச்சனைகளை தான் கிடைக்கும். தமிழ்நாடும்  இனி அண்டை நாடாக மாறினால் மட்டுமே இந்தியாவின் உதவிகள் கிடைக்கும் போல் தெரிகிறது. விரைவில் தமிழ் நாட்டை இந்தியாவின் அண்டை நாடாக உருவாக்குவோம். அதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம்.  இந்த முயற்சியை செய்ய வைப்பது வேறு யாரும் இல்லை இந்திய அரசே தான். 
[vuukle-powerbar-top]

Recent Post