Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மன்னர் ஆட்சியை நினைவுபடுத்தும் மோடியின் அதிகாரத்துவ சந்திப்பு  ! 

மோடி அவ்வப்போது மக்களவை உறுப்பினர்களை அழைத்து கமுக்கமான சந்திப்பை நடத்துகிறார். குறிப்பிட்ட சில மாநில பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே அழைத்து இந்த மூடிய சந்திப்பை நடத்துகிறார். மக்களவை உறுப்பினர்கள் அவர்கள் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை மோடியிடம் தெரிவிக்கலாம், மோடியுடன் சகஜமாக உரையாடலாம்  என்று கூறப்பட்டு இந்த சந்திப்பு நடைபெறுகிறது. ஆனால் உறுப்பினர்கள் எந்த பிரச்சனைகள் குறித்து பேசினாலும் அதை மோடி காதில் வாங்கிப் போட்டுக் கொள்வதாக தெரியவில்லையாம் . மேலும் மோடி மட்டும் ஒரு உயர்ந்த மேடையில் அமர்ந்து கொண்டு கேள்விகளை கேட்க உறுப்பினர்கள் வரிசையாக அமர்ந்து கொண்டு மோடி சொல்வதை கைகட்டி கேட்கும் நிலையில் உள்ளனராம்.  

அடுத்ததாக யாரெல்லாம் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கிறீர்கள் என்று மோடி கேட்டவுடன் சிலர் கைகளை தூக்குகின்றனர். அவர்களிடம் ஒன்றும் பேசாமல் அவர்கள் ஏதோ குற்றம் செய்தது போல் ஒருமுறை அவர்களை பார்க்கிறாராம்.  மேலும் இந்த அறையில் பேசப்படுவது எதுவும் வெளியில் போகக் கூடாது என்று உத்தரவு போடுகிறார் மோடி.  மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக வெற்றி பெற கட்சியை தயார் படுத்துமாறும், கட்சியை பற்றிய நல்லெண்ணத்தை மக்களிடம் கொண்டு செல்லுமாறும் மோடி உத்தரவிட்டு சந்திப்பை முடித்துக் கொள்கிறாராம். இப்படியான ஒருதலை பட்சமான  உரையாடல் நடைமுறையை  மோடியின் மக்களவை உறுப்பினர்களுக்கே பிடிக்கவில்லை என்று பெயர் சொல்ல விரும்பாத சிலர் புலம்பி உள்ளனர்.   

இந்தக் கூத்து  ஒரு புறம் இருக்க, தமிழகத்தை சேர்ந்த நம் பொன்னார் அங்கு என்ன செய்வார் என்று எண்ணிப்பார்க்கவே பரிதாபமாக உள்ளது. இந்தி வெறி பிடித்த மோடியுடன் ஆங்கிலத்தில் உரையாடினால் அவரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அதனால் வேறு வழியில்லாமல் தனக்கு தெரிந்த இந்தியில் சிரமப்பட்டு மோடியுடன் உரையாடுவார் எனத் தெரிகிறது . இன்னும் ஐந்து ஆண்டுகளில் மோடியின் அதிகாரத்துவம், மோசடித்தனம் என்னென்ன வேலைகள் செய்யப் போகிறதோ எனத் தெரியவில்லை.  மக்கள் எதற்கும் தயாராகவே இருக்க வேண்டும். 
[vuukle-powerbar-top]

Recent Post