Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழக அரசின் சார்பில் பொதுநலவாய விளையாட்ட்டுப் போட்டியில்  தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.50 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.30 லட்சமும் ஊக்கத்தொகையாக அளிக்கப்படுகிறது. இதன்படி 7 வீரர்–வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.2 கோடியே 70 லட்சம் வழங்கப்படுகிறது.

இதில் தமிழர்கள் கவனிக்க வேண்டியது இந்த பரிசுகளை வெல்வது எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் அல்லது எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதைத் தான்.

தீபிகா - மலையாளி
ஜோஸ்னா - கன்னடர்
ருபிந்தர்சிங் - பஞ்சாபி
சிரிஜேஷ் - மலையாளி
சரத் கமல் - தெலுங்கு
சதீஸ் சிவலிங்கம் - தமிழ்
அந்தோணி அமுல்ராஜ் - தமிழ்

தமிழக அரசு தமிழர்களுக்கான அரசு என்பதை நினைவில் கொள்ளவேண்டும் . தமிழக அரசின் பரிசு பெற்ற வெளிமாநில விளையாட்டு வீரர்களை அவர்கள் சார்ந்த மாநிலங்கள், இனங்கள் பாராட்டுகின்றன. பரிசு மட்டும் தமிழக அரசு வழங்குகிறது . காரணம் இவர்கள் தமிழக அணிக்காக விளையாடி உள்ளனர் என்பது தான். தமிழக அணிக்கு தமிழர்களை தவிர வெளிமாநில மக்கள் எல்லாம் விளையாடலாம் என்றால் தமிழர்களுக்கு ஒரு அரசு எதற்கு ? தமிழகத்தின் சார்பில் விளையாடக் கூடியவர்கள் குறைந்த பட்சம் இந்த மண்ணின் மைந்தர்களாக இருத்தல் வேண்டும். அவர்களின் பெற்றோர்களின் ஒருவர் தமிழை தாய் மொழியாகக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் குடும்பம் குறைந்தது 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் வாழ்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு தமிழ் தேர்வும் எழுத வேண்டும். இப்படியான தேர்வுகளின் அடிப்படையில் தான் தமிழக அணியின் சார்பில் ஒருவரை விளையாட அனுமதிக்க வேண்டும். அப்போது தான் உண்மையில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு , தமிழர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும். இல்லையெனில் தமிழக அரசின் பரிசுகளை வெளிமாநில மக்கள் அள்ளிச் செல்வதை தமிழர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க நேரிடும். தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு இனி செயல்பட வேண்டுகிறோம் .





[vuukle-powerbar-top]

Recent Post