Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூகிள் நில வரைபடத்திலும் (Google Maps) இந்தித் திணிப்பு ! இந்திய அரசின் மறைமுக செயல்திட்டம் !

இந்திய அரசு நிறுவனங்கள் தான் எல்லா வழிகளிலும் இந்தியை மக்களிடம் திணிக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கையில் அனைவருக்கும் பொதுவான கூகிள் இணையத்திலும் இப்போது இந்தி திணிப்பு நடைபெறுகிறது. இதை தவிர்க்க முடியாதவாறு செய்துள்ளது கூகிள் இணைய தளம். இந்திய அரசு இப்போது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள், கூகிள் வரைபட சேவைகள் போன்ற பல்வேறு வலைதளங்களில் இந்தியை புகுத்த வேலைகளை செய்து வருகிறது .

முகநூல் பயனாளர்கள் முதல் முறையாக முகநூலில் நுழையும் போதே இந்தியில் தான் தகவலை காட்டுவதாக ஏற்கனவே புகார்கள் வந்துள்ளன. இந்நிலையில் தமிழ் மொழியை தேர்வு செய்த கூகிள் பயனாளர்கள் கூகிள் இணையத்தின் நில வரைபடத்தில்  ஏதாவது ஒரு ஊருக்கோ அல்லது குறிப்பிட்ட பகுதிக்கோ செல்ல திசைகளை தேடினால் அதில் இந்தி எழுத்துருக்களையும் திணித்துள்ளது கூகிள் நிறுவனம். இதை யார் நினைத்தாலும் தவிர்க்க முடியாது.

தற்போது முக்கிய சாலைகள் , நெடுஞ்சாலைகள், தெருக்கள் வரை இந்தியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் நம் வீட்டின் பெயர், வணிக நிறுவனங்களின் பெயர் வரை இந்தி எழுத்துருவில் பெயர் மாற்றம் செய்யப்படலாம்  எனத் தெரிகிறது. இந்த நிலையை தவிர்க்க இது குறித்து கூகிள் நிறுவனத்திற்கு நாம் தெரியப்படுத்துதல் வேண்டும். இது இந்திய அரசின் மறைமுக இந்தித்திணிப்பு செயல்திட்டம் என்றாலும் எதிர்ப்பு தெரிவிக்காமல் நம்மால் இதை நீக்க முடியாது. தமிழர்கள் அனைவரும் கூகிள் வரை படத்திற்கு (google maps) சென்று அங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள புகார் அளித்தல் சேவையை பயன்படுத்தி இந்தியை கூகிள் தேடலில் திணிக்கக் கூடாது என்று கூறவேண்டும்.

கீழுள்ள புகாரை பார்க்கவும் ... இப்படி நீங்களும் உங்கள் புகாரை அனுப்பினால் இந்தித் திணிப்பு நீக்கப்படும். இல்லையெனில் நீங்கள் விரும்பாவிட்டாலும் நீங்கள் தேடும் பகுதியில் இந்தி கட்டாயம் இடம்பெறும்.
-------------------------------------------------------
நான் தமிழ் வழியில் கூகிள் வரைபடத்தை பயன்படுத்துகிறேன் . எனக்கு என் மொழியில் வரைபட தேடல் செய்திகள் வருகிறது . ஆங்கிலத்தில் வருகிறது . ஆனால் தமிழர்களுக்கு தொடர்பில்லாத இந்தி மொழியில் இடப் பெயர்கள் வருவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஒரு திட்டமிட்ட இந்தித் திணிப்பாகவே பார்க்க முடிகிறது . மேலும் இது தமிழ் மொழித் தேடலின் தனித் தன்மையை குலைக்கிறது. தமிழகத்தில் தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் வரை படத்தை தேடினால் இந்தி வருவது எந்த வகையிலும் நியாயம் இல்லை . அதனால் இந்தி மொழியை கூகிள் வரைபட தேடலில் இருந்து நீக்குமாறு பத்து கோடி தமிழர்களின் சார்பில் வேண்டுகிறோம். அந்தந்த மாநில மொழிகளை அந்தந்த மாநிலத்தில் பயன்படுத்துமாறும் மதிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கிறோம்.

நன்றி
இராஜ்குமார் பழனிசாமி
தமிழர் பண்பாட்டு நடுவம்
சென்னை .

குறிப்பு : இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல. இந்திய ஒன்றியம்  22 அலுவல் மொழிகளை கொண்டது. இங்கு அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை கொடுக்கப்பட வேண்டும்.

[vuukle-powerbar-top]

Recent Post