Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

aintham thalaimurai siddha vaidhiya sigamani

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி என்ற படத்தை சிறுது நேரம் இணையத்தில் பார்க்க நேர்ந்தது. தமிழ்ச் சித்த மருத்துவர்களை இதை விட வேறு எந்த வகையிலும் கேவலப்படுத்த முடியாது. இப்படத்தில் சித்த மருத்துவராக வரும் கதாநாயகனுக்கு படிப்பறிவே இல்லையாம். தமிழ் எழுதப் படிக்கக் கூட தெரியாதாம். மேலும் எல்லோரிடமும் ஏமாறுவாராம். தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் கூட ஏமாறுவாராம். படிக்கக் கூட தெரியாததால் பலரும் இவரை எளிதில் ஏமாற்றுகிறார்கள் என்பது போல திரைகதையை உருவாக்கி உள்ளார்கள்.

படத்தின் இயக்குனர் சித்த மருத்துவர்கள் பற்றி மிகத் தவறான புரிதலை கொண்டுள்ளார் அல்லது வேண்டுமென்றே சித்த மருத்துவர்களை இழிவு செய்துள்ளார் என்று தெரிகிறது. பரம்பரை சித்த மருத்துவர்களாக இருந்தாலும் சித்தர்களின் மருத்துவ நூல்களை படிக்காமல் ஒருவர் மருத்துவத்தில் தேர்ச்சி பெறமுடியாது. குறிப்பாக மூலிகை குண சிந்தாமணி என்ற நூலை படிக்காமல் எவரும் சித்த மருத்துவத்தை கையாள முடியாது. அதனால் சித்த மருத்துவர்களுக்கு படிப்பறிவு என்பது அவசியமாகிறது.மேலும் பரம்பரை சித்த மருத்துவர்கள் என்பவர்கள் வெறும் மருத்துவம் மட்டுமே அறிந்தவர்கள் அல்லர். இவர்கள் மானுடவியல், மெய்யியல், உளவியல் , உயிரியல் போன்ற பல இயல்களை கற்று உணர்ந்தவர்கள்.

ஒருவர் கால் பதிந்து நடந்து வருவதை வைத்தே இன்ன நோயினால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை சித்த மருத்துவர்களால் அறிய முடியும். நோயாளிகள் உடன் வரும் நபர்களை வைத்து நோயின் தீவிரத்தை அறியக் கூடியவர்கள் சித்த மருத்துவர்கள். நோயாளிகளின் பேச்சு, மூச்சு இவற்றை வைத்து நோயையும் அதற்கான மருத்துவத்தையும் அறியும் தன்மை கொண்டவர்கள் உண்மையான சித்த மருத்துவர்கள்.

அத்தகைய சித்த மருத்துவர்களை இப்படம் படிப்பறிவில்லாத, அறிவில்லாத முட்டாளாக காட்டுவது கண்டத்திற்கு உரியது. இப்படத்தை பார்த்து ஏன் சித்த மருத்துவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என தெரியவில்லை? தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் எந்த ஆய்வும் செய்யாமல்  தமிழர் பண்பாட்டு கூறுகளை இழிவு செய்து படமெடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.  



[vuukle-powerbar-top]

Recent Post