Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு தமிழர்களின் ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும் .

கடந்த சனிக்கிழமை நூற்றுக்கும் மேலான தமிழக அமைப்புகள் பங்குபெற்ற மாபெரும் ஒருங்கிணைப்பில் நானும் கலந்து கொண்டு என்னுடைய கருத்தை முன்வைத்தேன். காலை முதல் இரவு 8 மணிவரை  நடைபெற்ற இந்த ஒன்றுகூடலில் திராவிடக் கட்சிகள், திராவிடம் சார்ந்த அமைப்புகள், பெரியாரிய அமைப்புகள், பொதுவுடைமை கட்சிகள் அமைப்புகள், தலித்திய கட்சிகள் அமைப்புகள், சாதிய கட்சிகள் அமைப்புகள், தமிழ்த் தேசிய கட்சிகள் அமைப்புகள் என எல்லா தளங்களில் இருந்தும் தலைவர்கள் வந்திருந்தனர்.

இப்படி பல முரண்களை கொண்ட கட்சிகள் ஒன்று கூடினாலும் அனைவரையும்  ஒரு பொதுவான நோக்கமே  ஒன்றிணைத்தது. அது  தமிழகம் மற்றும் தமிழீத்தின் பொது நலனாகவே இருந்தது. எல்லா தலைவர்களுக்கும் சில நிமிடங்கள் பேச வாய்ப்பு கிடைத்தது, கிடைத்த வாய்ப்பில் பலரும் பல கருத்துக்களை முன்வைத்தனர் , ஒருவர் சொன்ன கருத்தில் மற்றவருக்கு உடன்பாடு இல்லையென்றாலும் அனைவரும் தமிழர் நலனுக்காக மிக நாகரீகமாக தங்களின் கருத்துகளை முன்வைத்தனர். தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் , தமிழீழத்திற்கு தேவையான போராட்ட வழிமுறைகள் குறித்து அதிகம் பேசப்பட்டது. இறுதியில்  சில தீர்மானங்களும் இயற்றப்பட்டது. அதன்படி வரும்  26 ஆம் தேதி சென்னையில் ராஜபக்சே ஐ.நாவில் பேசக் கூடாது என்பதை வலியுறுத்தியும், இலங்கைக்கு இந்திய அரசு துணை போடக் கூடாது என்பதை வலியுறுத்தியும் பிரமாண்ட பேரணி நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது .

தமிழர் பண்பாட்டு நடுவத்தின் சார்பில் நான் முன்வைத்த விடையங்கள் வருமாறு.

தமிழகம் மீண்டும் ஒரு மொழிப் போராட்டத்தை தொடங்கினால் மட்டுமே தமிழ் மொழியை தக்க வைக்க இயலும். இந்தித் திணிப்பை தடுக்க இயலும் . காஷ்மீர் தேசத்திற்கு இருப்பது போல தமிழகத்திற்கும் நில உரிமை சட்டம் தேவைப் படுகிறது . சட்டப் பிரிவு 370 தமிழகத்திற்கும் தேவை என்ற நிலையில் அதற்கான போராட்டங்களை தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டும். மாநில சுயாட்சியை நோக்கி தமிழகம் செல்ல வேண்டும். மேலும் தமிழக அரசியலில் ஒரு திருப்பு முனையாக தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு ஒரு வலுவான, அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய மாபெரும் சக்தியாக உருவெடுக்க வேண்டும். தமிழக அரசுக்கும்  இந்திய அரசுக்கும் தமிழர்களின் குரலாக தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு விளங்க வேண்டும் என்ற கருத்தை பதிவு  செய்தேன்.  இதே போல தமிழக அமைப்புகள் ஒன்றுபட்டால் தமிழகத்தின் பல போராட்டங்களையும் , தமிழர் உரிமைகளையும் நிச்சயம் நாம் வென்றெடுக்கலாம். தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு வெல்லட்டும். தமிழர் உரிமைகள் மீட்கப்படட்டும்.




   
[vuukle-powerbar-top]

Recent Post