Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கர்நாடகாவில் சூடு பிடிக்கும் இந்தி எதிர்ப்பு போராட்டம். இந்தி திணிப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கில் பேரணியாக சென்று ஆளுநருக்கு மனு அளித்தனர்!

இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தி மொழி திணிக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் அறிவோம். இந்தியை மட்டுமே ஒற்றை ஆட்சி மொழியாக்கி மற்ற தொன்மையான மொழிகளை எல்லாம் இரண்டாம் தர மொழிகளாக இந்திய அரசு பாவித்து வருகிறது. ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் வகையில் இந்தி அல்லாத பிற மொழிகளை இந்திய அரசு புறக்கணித்து வருகிறது. இது உலகில் மிகப்பெரிய மொழித் தீண்டாமை ஆகும்.

இந்தி தெரியாவிட்டால் தமிழகத்தை தாண்ட முடியாது , சென்னையை தாண்ட முடியாது , வீட்டை தாண்டி வெளியே வர முடியாது என்றெல்லாம் பொய்யான திணிப்பு பரப்புரையை இந்தி வெறியர்கள் மக்களிடம் கொண்டு செல்கின்றனர் . இது தமிழர்களிடம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இன மக்களிடமும் இவ்வாறான மிரட்டல் பரப்புரையை செய்து வருகின்றனர் இந்தி ஆதரவாளர்கள். இந்தி திணிப்புக்கு எதிராக தமிழர்கள் மட்டுமே உள்ளனர் , மற்றவர்கள் எதிர்க்கவில்லை என்றும் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் இந்தித் திணிப்புக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு தேசிய இன மக்கள் போராடி வருகின்றனர். இதை திட்டமிட்டு மறைத்து வருகிறது இந்திய ஊடகங்கள்.

பெங்களூரில் இந்தித் திணிப்பை கைவிடுமாறு வலியுறித்தியும், அனைத்து தேசிய மொழிகளுக்கும் இந்திக்கு நிகரான சம உரிமையை வழங்க வேண்டும், 22  மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என வலியுறித்தியும் ஆயிரக்கணக்கான கன்னட மக்கள் பேரணியாக சென்றுள்ளனர். கன்னட பாதுகாப்பு இயக்கம் இந்த பேரணியை ஒழுங்கு செய்துள்ளது. இவர்கள் பேரணியாக சென்று கர்நாடகா ஆளுநரிடம் இந்தித் திணிப்பை இந்திய அரசு கைவிட வேண்டும் என்பதற்கு மனு கொடுத்துள்ளனர். இந்தியாவில் அனைத்து மனிதர்களும் சமம் என்றால் அனைத்து மொழிகளும் சமமாக பாவிக்கப் பட வேண்டும் போன்ற முழக்கங்களை முன்வைத்து இப்பேரணி நடைபெற்றது.

இப்படியான பேரணிகள், போராட்டங்கள்  பெருந்திறல் மக்கள் போராட்டமாக இந்தியாவெங்கும் நடைபெற வேண்டும் . அப்போது தான் இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் மொழிகள் இந்தியின் கோரப்பிடியில் இருந்து காப்பாற்றப்படும். வெல்லட்டும் மக்கள் போராட்டம். ஒழியட்டும் இந்தியின் ஆதிக்கம் !    

Karnataka Rakshana Vedike, an organization with lakhs of volunteers across Karnataka has been opposing the undemocratic Hindi imposition for almost a decade now. Today, KRV had organized a protest rally consisting of thousands of KRV volunteers and general public from Bannappa park near Corporation Circle till Raj Bhavan and submitted a memorandum to the Governor of Karnataka. Banners and Placards were designed accordingly. "If all Indians are equal, why aren't all Indian languages treated equal", "Hindi imposition should stop and let the lingustic diversity prevail", "Stop imposing Hindi using tax payers money", "Language policy which imposes Hindi must be scrapped", We vehemently oppose the imposition of Hindi which is a threat to our federal system" were few of the key messages used in the placards.

A memorandum was submitted to the Governor,who is a representative of the Government of India to communicate to the Central Government to stop imposing on non Hindi speaking people and to make all the 22 scheduled languages of the constitution as Official languages of this country immediately.

[vuukle-powerbar-top]

Recent Post